உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணனுக்கு அயோத்தி பாஸ் கேட்டு வாங்கிய ரஜினி!

அண்ணனுக்கு அயோத்தி பாஸ் கேட்டு வாங்கிய ரஜினி!

''விதிகளை மீறி, 'லே அவுட்'களை அமைக்கிறாங்க பா...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய். ''எந்த ஊருல வே...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.''சென்னை, புழல் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏழு ஊராட்சிகள்ல, சி.எம்.டி.ஏ., அனுமதியோட, பிளாட் போட்டு விற்பனை பண்றாங்க பா... 'ஒரு லே அவுட் உருவாக்குனா, சாலை, தடுப்பு சுவர், வாகன நிறுத்தம் அமைக்கணும்... பூங்கா அமைக்க, ௧௦ சதவீதம் இடம் ஒதுக்கணும்'கிறது சி.எம்.டி.ஏ., விதி...''ஆனா, ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள், 'கவனிப்பால' சி.எம்.டி.ஏ., சீனியர் பிளானர் மற்றும் புழல் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், இந்த விதிகளை எல்லாம் நேர்ல ஆய்வு செய்றதே இல்ல...''விதிகளை மீறி லே அவுட்களை உருவாக்குறவங்க, அரசு புறம்போக்கு நீர்நிலைகளையும் வளைச்சு போட்டுக்கிறாங்க பா...'' என்றார்,அன்வர்பாய்.''இப்படி எல்லாம் பண்ணிண்டு, நாளைக்கு மழை பெய்யறச்சே, தெரு முழுக்க தண்ணீர் தேங்கிடுத்துன்னு புலம்பினா என்ன அர்த்தம்...'' என, அலுத்துக் கொண்ட குப்பண்ணாவே, ''காளியம்மாளை மீண்டும் களம் இறக்கணும்னு சொல்றா ஓய்...'' என்றார்.

''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''கடந்த லோக்சபா தேர்தல்ல, வடசென்னை தொகுதியில, நாம் தமிழர் கட்சி சார்பா, போட்டியிட்டவங்க தான் காளியம்மாள்... அந்த தேர்தல்ல, தி.மு.க.,வின் கலாநிதி ஜெயிச்சிட்டார் ஓய்...''ஆனாலும், மக்களுக்கு அறிமுகமே இல்லாத காளியம்மாள் 60,515 ஓட்டுகள்வாங்குனாங்க... அடுத்து வந்த சட்டசபை தேர்தல்ல, வடசென்னைக்கு உட்பட்ட திருவொற்றியூர்ல சீமான் நின்னு, 48,597 ஓட்டுகள் வாங்கினார் ஓய்...''சமீபத்துல, அமோனியா வாயு கசிவு, எண்ணெய் கழிவு கலப்பு விவகாரம்,மீனவர் சார்ந்த பிரச்னைக்கு தீர்வு காணாம இருக்கறதுன்னு, ஆளுங்கட்சி மேல மக்கள் கோபமா இருக்கா...''இதனால, 'இந்த முறையும் காளியம்மாள் வடசென்னையில நின்னா, தி.மு.க.,வுக்கு கடும் போட்டியை உருவாக்க முடியும்'னு, அந்த கட்சியினர் சொல்றா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''அண்ணனுக்கும் சேர்த்து, அனுமதி வாங்கிட்டாரு வே...'' என்றார், அண்ணாச்சி.''யாரை சொல்றீங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''அயோத்தியில, வர்ற 22ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்க இருக்குல்லா... நாடு முழுக்க வி.வி.ஐ.பி.,க்கள், சாதுக்கள்னு, ௬,௦௦௦ பேருக்கு தான் அனுமதி தந்திருக்காவ வே...''இதுல நடிகர் ரஜினிக்கும், அவரது மனைவி லதாவுக்கும் மட்டும் தான் முதல்ல அனுமதி குடுத்திருக்காவ... ஆனா, தன் அண்ணன் சத்யநாரயண ராவுக்கு ௮௪ வயசாகிட்டதால, அவரையும் ராமரை தரிசிக்க அழைச்சிட்டு போக ரஜினி விரும்பியிருக்காரு வே...''இதை, தன் நெருங்கிய நண்பரும், தமிழக பா.ஜ., சமூக ஊடக பார்வையாளருமான அர்ஜுனமூர்த்தியிடம் சொல்லியிருக்காரு... அவரும், ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகளிடம் பேசி, மூணு பேருக்குமா அனுமதி வாங்கி தந்துட்டாரு...''இவங்க, ௨௧ம் தேதி சென்னை ஏர்போர்ட்ல இருந்து அயோத்திக்கு கிளம்பி, 23ம் தேதி சென்னைக்கு திரும்பி வர்றாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

r ravichandran
ஜன 07, 2024 10:31

அடிப்படையில் ஒன்று புரியவில்லை, நடிகர்கள் நடித்து சம்பாதிக்கிறார்கள், அவர்கள் கொடுக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? எத்தனையோ தொழில் அதிபர்கள், மருத்துவர்கள், வக்கீல்கள், தொலை காட்சி சானல் முதலாளிகள் சம்பாதிக்கிறார்கள் , அவர்களிடம் கேட்பது இல்லை. கொடுப்பதும், கொடுக்காமல் இருப்பதும் அவரவர் விருப்பம். இது போல அவர்கள் சம்பாதித்த பணத்தை கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது அருவெறுப்பாக உள்ளது.


Bye Pass
ஜன 07, 2024 08:09

21ம் தேதி சென்னை ஏர்போர்ட்ல இருந்து அயோத்திக்கு கிளம்பி, 23ம் தேதி சென்னைக்கு திரும்பி வர்றாவ ...


sankar
ஜன 07, 2024 06:11

இவரு என்ன சொத்து வைச்சிருக்காரு வருடத்துக்கு எவ்வளவு கோடி தான தருமம் செய்கிறார் இவரு மனைவி நடத்தும் பள்ளி சம்பளம் ஒழுங்கா கொடுக்கிறார்களா மக்கள் இவருக்கு எவ்வ்லவோ கோடி கொடுத்து விட்டார்கள் திரும்பி இவரு கொடுத்தது என்ன விசாரிச்சு எழுதுங்க மற்ற எந்த விஷயமும் தேவை இல்லை இவரை பற்றி


Karthikeyan K Y
ஜன 07, 2024 06:09

அரசியலும் சினிமாவும் சனாதானத்திலும் இஸ்லாத்திலும் சர்வ மதத்திலும், கலாசாரித்தலும் பாரம்பரியத்தில் நுழைந்த பின் தான் மதவாதம் தீவிர வாதம் உக்கிரம் அடைந்து மக்களின் நிம்மதியை அமைதியை மகிழ்ச்சியை சீரழித்து விட்டது ஆங்கிலேயர் முகலாயர் காலத்திலும் இந்தளவு இல்லை. ரஜினி, சோனியா மற்றும் சினிமா , அரசியல் தலைவர்கல் கோயிலில் என்ன வேலை , பக்தகர்களாக எல்லோரையும் ஒன்றாக சரி சமமாக பார்ப்பதாக அந்தந்த மதத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது , அரசியலும் சினிமாவும் வியாபாரமும் இழிவும் செய்கிறார்கள் ரஜினிக்கு ஏன் முக்கியத்துவம் சோனியாவுக்கு ஏன் அழைப்பு , ராமாயணத்தில் பட்டாபிஷேகம் பொது அணைத்து ஜீவா ராசிகளையும் அரசவையில் மரியாதையை செய்வதாக நாம் படிக்கிறோம். ரஜினி, சோனியா, மற்றும் சினிமா அரசியல் சார்ந்த அடையாளம் இருப்பவர்களை விட்டு பக்தியுள்ள மக்களை வைத்து பஜனைகளையும் பூஜா விதங்களையும் செய்வதே சிறப்பாக இருக்கும். எத்தனையோ பேர் விரதம் இருந்து, பெருமையோடு, பக்தி மார்கமாக வர வேண்டும் என்று நினைப்பவர்களை ராமபிரான் பக்தர்களை இழிவு படுத்தாதீர்கள்


Senthoora
ஜன 07, 2024 06:06

அப்போ ரஜினி சாருக்கு, ராகவேந்திரா மீது நம்பிக்கை இல்லை, .... எதுக்கு கூட்டிபோகமுடியாது, எல்லாம் வெளி வேஷம்.


Palanisamy Sekar
ஜன 07, 2024 04:00

இவரது செய்தியை படித்தாலே எரிச்சல்தான் வருகின்றது. மனுஷன் வாழுகின்ற காலத்தில் நாட்டுநலன் பற்றி சிந்திக்கவே மாட்டேங்கிறாரே, என்னத்த சம்பாதிச்சு என்னத்த கொண்டுபோகப்போறாரோ தெரியல. சுயநலவாதி. விஜய் தொலைக்காட்சி பாலா போன்றோருக்கு கொடுங்கள் முக்கியத்துவத்தை..உங்களுக்கு மட்டுமல்ல பல ஏழைகளுக்கு அந்த புண்ணியம் சென்றடையும். இதில் பட்டப்பெயருக்கு சிறுவர்களோடு மோதி..அதனால்தான் சொல்றேன் இவரைப்பற்றி செய்திகளை போடாதீங்க பிளீஸ்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை