உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருத்துவமனையில் ரஜினி அட்மிட்

மருத்துவமனையில் ரஜினி அட்மிட்

சென்னை: சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், உடல்நலக் குறைவால் நடிகர் ரஜினி, 73, நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார்.இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்த வேட்டையன் படம் வரும் 10ல் வெளியாக உள்ளது. இதையடுத்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில், ரஜினி நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார். பரிசோதித்த டாக்டர்கள், அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்தனர். அதற்கான பரிசோதனை நடந்து வருவதாகவும், விரைவில் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Lion Drsekar
அக் 01, 2024 10:48

ஒவ்வொரு படம் வெளிவரும்போதெல்லாம் ஏதாவது ஒரு விதத்தில் மக்கள் பேசும் அளவுக்கு ஒரு இலவச விளம்பரம் . அரசியல் என்று ஏமாற்றி இப்போது உடல்நலன் இவர்கள் வாழ்வது அவர்களுக்கு மட்டுமே. அரசியலும் சினிமாவும் ஒன்று. அறிந்தால் நன்று. நமக்கு நமே துணை . ஹிரண்யாய நமஹ .


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 01, 2024 13:25

நான் சொல்ல நினைத்த கருத்து.


s sambath kumar
அக் 01, 2024 14:25

ஏதாவது உளறாதீங்க சார். உடம்பு முடியாத மனுஷனை பற்றி நீங்க அபத்தமா பதிவு போடுறீங்க. இந்த லட்சணத்தில் ஹிரண்யாய நமஹ வேறு. சகிக்கலை உங்கள் கமெண்ட்.


Palanisamy Sekar
அக் 01, 2024 06:43

பணம் பணம் பணம்ன்னு பணத்துக்கு பின்னாடியே ஓடிட்டு இருந்தா எப்படிங்க ரஜினி? இன்னுமா உங்களுக்கு அந்த பணத்தின் மீதான பேராசை அடங்கலை? என்னய்யா பணம், இன்னிக்கு உங்ககிட்ட நாளைக்கு என்கிட்டே, பணமா முக்கியம்? ஆரோக்கியம் முக்கியம். இவ்வளவு சேர்த்து வெச்ச்சு என்னதான் செய்யப்போறீங்க? ஆசையை நாமதான் கட்டுப்படுத்தனும். நாம மட்டுமே சம்பாதிச்சிட்டே இருக்கணும்கிற எண்ணத்தை விட்டொழியுங்க. உலகத்தில் எவ்வளவோ விஷயங்கள் இருக்கு அனுபவிக்க. இப்போ ஆஸ்பத்திரியில் படுத்திருக்கீங்களே இப்போ கூட உங்களுக்கு பணத்தின் மீதான ஆசை வந்திருக்கும்? பொதுமயா போதும் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். மனிதர்களை சந்தியுங்கள். உங்கள் மீது பாசமிக்க ரசிகர்களை தினமும் நேரிடையாக சாந்தியுங்க. உங்களுக்கு நீங்களே இடைவெளியை போட்டுக்கொள்ளாதீங்க. மக்கள் ஒன்றும் தீண்டத்தகாதவர்கள் அல்ல.. நெருக்கமாக பழகி பாருங்கள். அந்த பாசத்தில் நேசத்தில் உங்களின் பணப்பேராசை காணாமல் மறைந்து போய்விடுமுங்க.. அட நெசந்தாங்க..மீண்டும் வாங்க நான் சொன்னதை செஞ்சு பாருங்க ரஜினி. முன்னொரு காலத்தில் நானும் உங்களின் ரசிகனாக இருந்தவன் தான்


சண்முகம்
அக் 01, 2024 05:26

நலம் பெற வேண்டுகிறோம்.


அஸ்வின்
அக் 01, 2024 03:16

இதுவும் ஒரு யுக்தியா இவனுக்கு ஏதா ஒரு நாடகம்


s sambath kumar
அக் 01, 2024 14:30

உங்கள் பதிவு அபத்தமா இருக்கு. முடிந்தால் ஆறுதல் சொல்லுங்க, இல்லை பேசாம இருங்க.


சமீபத்திய செய்தி