உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கருணாநிதி 100 விழாவில் ரஜினியின் பேச்சு: சிவாஜியின் பழைய பேச்சு ட்ரெண்டிங் ஆச்சு!

கருணாநிதி 100 விழாவில் ரஜினியின் பேச்சு: சிவாஜியின் பழைய பேச்சு ட்ரெண்டிங் ஆச்சு!

சென்னை: சென்னையில் நடந்த 'கருணாநிதி 100' விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, நடிகர்கள் எம்ஜிஆர், சிவாஜிகணேசனை கருணாநிதி தான் உருவாக்கினார்' என்று குறிப்பிட்டார். இதற்கு பதிலளிக்கும் விதமாக முன்பு கருணாநிதி பற்றி, சிவாஜிகணேசன் பேசியது சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது. ரஜினி மீது பல்வேறு விமர்சனங்களும் எழுந்துள்ளன.முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ் திரையுலகம் சார்பில் பிரமாண்ட கலை நிகழ்ச்சி சென்னையில் உள்ள கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் (ஜன.,6) நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நடிகர் ரஜினிகாந்த், ''சிவாஜியை ஒரே படத்தில் ஸ்டார் ஆக்கியவர் கருணாநிதி. சாதாரண நடிகராக இருந்த எம்ஜிஆரை பெரிய வெற்றிப் படங்களை கொடுக்க வைத்தவர். அவர் அரசியலுக்கு செல்லாமல் சினிமாவிலேயே இருந்திருந்தால் எத்தனையோ சிவாஜி, எம்ஜிஆரை கருணாநிதி உருவாக்கி இருப்பார்.'' எனப் பேசியிருந்தார்.ரஜினியின் பேச்சுக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாவது: மிஸ்டர் ரஜினி காந்த்! ஏதோ 'கருணாநிதி 100' விழாவுக்கு போனோமா, கருணாநிதியை பற்றி பேசினோமா.. உங்கள் வாழ்வுக்கும் வளத்துக்கும் எதையும் செய்து கொண்டு போகலாம்.. அதை பற்றி கவலை இல்லை.. ஆனால் எம்ஜிஆர், சிவாஜியையே உருவாக்கியது கருணாநிதி தான் என பேசியது உங்களுக்குள் ஏதோ சிஸ்டம் சரியில்லை என நிரூபணம் ஆகிறது.

உருவாக்கியது கருணாநிதியா?

எம்ஜிஆர் பற்றி நான் சொல்லப் போவதில்லை. அது திராவிடத்தின் இன்னொரு கூறு. அதை அவங்க பார்த்துக் கொள்ளட்டும். ஆனால் சிவாஜியை உருவாக்கியது கருணாநிதியா? படத்தை உருவாக்கியது, இயக்கியது, கதை எல்லாம் எவரோ செய்தது; வசனம் மட்டும் சம்பளம் வாங்கி எழுதியதால் சிவாஜியை உருவாக்கி தந்துவிட்டாரா? அப்போ கருணாநிதி வெற்றிச் சித்திரம் எவை? கருணாநிதிக்கு புகழ் வந்ததே பராசக்தி மூலம் தான். அதன் பின் மனோகரா உச்சம் தொட்டது. அவை இரண்டுமே சிவாஜியின் நடிப்பும் வசனம் பேசியதும் தான்.சிவாஜிக்கு கருணாநிதி இல்லாமல் எத்தனையோ வெற்றி படங்கள் குவிந்துள்ளன. கட்டபொம்மன் தான் வசனத்தின் உச்சம். அது கருணாநிதியின் வசனம் அல்ல. அதே போல எத்தனை எத்தனை படங்களும் வசனங்களும் உள்ளன. சிவாஜியை கருணாநிதி தான் உருவாக்கினார் என்றால் அதன் பின் எவரையும் அதே போல ஏன் உருவாக்கவில்லை? ஏன் சொந்த மகன் மு.க.முத்துவை உருவாக்க முடியவில்லை?

ஏன் நடிக்கவில்லை

கருணாநிதி எழுதியது அவ்வளவு உயர்வு என்றால் அவரது வசனத்தில் ஒரு படம் கூட ரஜினி ஏன் நடிக்கவில்லை? உளியின் ஓசை அல்லது கருணாநிதி ஆசையாக எழுதிய வாலிப விருந்து படத்தில் ரஜினி நடித்து இருக்கலாமே.. அவர் மட்டும் நடிக்க மாட்டாராம்.. ஆனால் எல்லோரையும் அவர் தான் உருவாக்கினார் என பேசுவாராம்.. நல்லவேளை ரஜினி சார்.. நீங்க அரசியலுக்கு வரவில்லை... உங்களை எதிர்பார்த்த நாங்க தப்பித்தோம். இவ்வாறு நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர்.

சிவாஜியின் பதிலடி

பல ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதி பற்றி, நடிகர் சிவாஜிகணேசன் அளித்த பேட்டியின் தொகுப்பு தற்போது வைரலாகியுள்ளது. அதில் சிவாஜி கூறியிருப்பதாவது: கருணாநிதி இப்போது என்ன பேசுகிறார் என்பது அவருக்கே தெரியாது. என்னையும், எம்ஜிஆரையும் கருணாநிதி தனியாக விமர்சனம் செய்கிறார். எங்களை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசும் அவசியம் அவருக்கு வந்துவிட்டது.நடிகர்கள் அரசியல் பேசலாமா? என்று கேட்கிறார். கருணாநிதி மட்டும்தான் அரசியல் பேச வேண்டும் என்றால், அவருக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது. அவர் வசனத்தை நான் பேசியதால் தானே கருணாநிதிக்கு பெருமை ஏற்பட்டது. எனக்கும், எம்ஜிஆருக்கும் கருணாநிதியின் அரசியல் எப்படிப்பட்டது என்று தெரியும். இவ்வாறு அவர் பேசியிருந்தார். அவரது பேச்சு அடங்கிய நாளிதழ் தொகுப்பும் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 59 )

Mani . V
ஜன 13, 2024 06:09

ஒரு திரைப்படத்தில் விஜய் சேதுபதி, "இதுக்குப் பேரு என்ன தெரியுமா? எச்சை" அப்படின்னு சொல்லுவது ஏனோ நினைவுக்கு வந்து போகிறது.


ponssasi
ஜன 12, 2024 17:22

மு க முத்து, ஸ்டாலின், அழகிரி இவர்கள் யாரையும் சினிமாவிலோ, அரசியலிலோ கருணாநிதியால் உருவாக்க முடியவில்லை, மாறாக இவர்களின் வளர்ச்சிக்காக வளர்ந்தவர்களை அதிகார பலம் கொண்டு ஒடுக்க முற்பட்டார். மு க முத்துவுக்காக MGR அவர்களை தூக்கியெறிந்தார், மக்கள் செல்வாக்கு கொண்ட MGR தான் இருக்கும் வரை கருணாநிதியை மூலையில் முடக்கினார் மு க முத்துவின் சகாப்தத்தையும் முடித்துவைத்தார். அடுத்து ஸ்டாலின் அவருக்காக கட்சியில் இருந்து தூக்கியடிக்கப்பட்டவர் வைகோ. வைகோவிற்கு இளைஞ்சர்கள் எழுச்சி இருந்தும் கருணாநிதியின் சூழ்ச்சி வலையில் சிக்கி மீண்டும் அவரிடமே சரணடைந்தார். அழகிரி இவரை தூக்கி நிறுத்த முன்னாள் அமைச்சர் தா கி கொடூரமாக கொல்லப்பட்டார், அழகிரி கைகாட்டுபவர்கள் மண்ணின் மன்னன் என துதிபாடப்பட்டனர். இதுதான் கருணாநிதி மற்றவர்களை வளர்த்த வரலாறு. பாவம் ரஜினி நாளை அண்ணாமலை முதவரானால், இல்லை எடப்பாடி ஏன் சீமான் முதவரானாலும் அவர்களுக்கு தகுந்தாற்போல பேசும் நல்ல நடிகனாவான்.


spr
ஜன 12, 2024 11:26

பாடல்கள் பாடுபவராலும், வசனங்கள் பேசுபவராலும் மக்களிடம் சென்று சேர்கிறது இல்லையேல் அவையிரண்டும் உயிரற்ற ஒன்றே இந்த "மாமனிதர்" சத்திய சாயி பாபாவையும் கொச்சைப் படுத்துகிறார் தமிழ் நாட்டு மக்களின் நீண்ட காலத் தேவையான கிருஷ்ணா நதிநீர் சென்னைக்கு கொண்டுவர சத்திய சாயி பாபா அமைப்பு அன்றைய முதல்வர் கலைஞரிடம் (முத்துவேல் கருணாநிதி என்ற இவரது பெயரைச் சொல்ல எவரும் விரும்புவதில்லை போலும்) ருபாய் 200 கோடியை கொடுத்து அனுமதி பெற்றது அது சத்திய சாயி பாபா அவர்களின் மனித நேயத்தைக் காட்டுகிறது இதனை பாபாவிடம் பணம் பெறாமல் தமிழக அரசின் செலவில் செய்திருக்க வேண்டும் இதையெல்லாம் இந்த சந்தர்ப்பவாத அறிவிலி அறிய வாய்ப்பில்லை


Hari
ஜன 10, 2024 12:00

தி மு க ரஜினியை வாழ்நாள் அரசியலில் துறவறம் போக இந்த சைத்தான் நூறு மேடையை பயன்படுத்திக்கொண்டுள்ளது.


Krishnamurthy Venkatesan
ஜன 09, 2024 12:16

ரஜினி பேசிய இந்த வசனம் எழுதி தந்தது யாரோ?


N Annamalai
ஜன 09, 2024 11:26

நல்ல வேலை இவர் முழு அரசியலுக்கு வரவில்லை.


S.V.Srinivasan
ஜன 09, 2024 10:57

அவருக்கு வயசாயிடுச்சு சன் பிக்ஷுர்ஸ், ரெட் ஜெயண்ட் இரண்டும்தான் இப்போ அவரை தாங்கி பிடிச்சுக்கிட்டு இருக்கு. அதுக்கு கைமாறுதான் இந்த மாதிரி பேச வச்சுருக்கு.


Jay
ஜன 09, 2024 00:16

செஞ்சொற்று கடந் தீர்க்க சேராத இடம் சேர்ந்தது


g.s,rajan
ஜன 08, 2024 23:02

கட்டுமரம் கட்டாயம் கவுத்துடும்.....


Barakat Ali
ஜன 08, 2024 21:37

தொண்ணூறுகளின் துவக்கத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் ஒட்டு மொத்தமாக ரஜினியின் பின்னால் அணிவகுக்கத் தயாராக இருந்தோம் ....... ஒரு வீரரின் பின் செல்லத் தயாராக இருந்தோம் என்று இப்போது நினைத்தாலும் அருவருப்பு மேலிடுகிறது .....


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை