உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரஜினி உடல்நிலை சீராக உள்ளது; 2 நாளில் வீடு திரும்புவார்: மருத்துவமனை அறிக்கை

ரஜினி உடல்நிலை சீராக உள்ளது; 2 நாளில் வீடு திரும்புவார்: மருத்துவமனை அறிக்கை

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் 2 நாளில் வீடு திரும்புவார் என்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=36ev6oie&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நடிகர் ரஜினிகாந்த் (வயது 74) திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று (செப்.,30) அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனை தரப்பில் இருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் வராமல் இருந்தது. ஆனால், ரஜினிக்கு அடிவயிற்றுக்கு அருகே ரத்த நாளம் பெரிதாகி இருப்பதால் அதற்குரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நடிகர் ரஜினிகாந்தின் இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த வீக்கம் அறுவை சிகிச்சையின்றி அகற்றப்பட்டது. ரத்தக்குழாய் வீக்கத்திற்கான சிகிச்சைக்கு ஸ்டன்ட் (STENT) பொருத்தப்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விஜய்

ரஜினிகாந்த் குணமடைய பிரார்த்திப்பதாக நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவருமான விஜய் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவு: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வரும் ரஜினிகாந்த் விரைவில் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று உளமார இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Ravi Kumar
அக் 02, 2024 06:34

இறைவன் அருளால் விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்


theruvasagan
அக் 01, 2024 22:12

இந்த நடிகர் எந்த அரசாங்க பொறுப்பில் இருக்கிறார். அவர் உடல்நிலை பற்றி அமைச்சர் எதற்கு அறிக்கை விட வேண்டும். புரியவில்லை. குப்பனுக்கும் சுப்பனுக்கும் இந்த சலுகை உண்டா.


சிவா அருவங்காடு
அக் 01, 2024 22:11

ஆண்டவன் போட்ட பிச்சை.


Jagan (Proud Sangi)
அக் 01, 2024 21:50

இவர் சினிமா ஏதாவது ரிலீஸ் ஆக போகுதா ? ஏன் இந்த ஸ்டாண்ட்


Radja
அக் 01, 2024 21:00

நாட்டுக்கு ஒன்னும் உபயோகம் இல்லை.


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 01, 2024 20:37

அவருடைய அடுத்த படம் வசூல் குவித்தால் நார்மல் ஆகிவிடுவார் .........


Ramesh Sargam
அக் 01, 2024 20:07

ரஜினி ஒரு தனிப்பட்ட பொது மனிதராக கருதி அவர் சீக்கிரம் குணமடைய வேண்டிக்கொள்கிறேன். ஆனால், இந்த அளவுக்கு விளம்பரம் தேவையில்லை.


Iniyan
அக் 01, 2024 19:24

அடி வயிற்று பகுதியில் இதயத்துக்கு போகும் ரத்த நாள அடைப்பா ??


Barakat Ali
அக் 01, 2024 19:03

இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டுள்ளது .....


நசி
அக் 01, 2024 18:55

உடம்பு சரி இருந்தாலும் இல்லா விட்டாலும் .. இவ்வுலகில் மற்றவர்கள் உங்களை நோக்க பணமே பிரதானம்...ஜெ இறப்பிற்கு அப்போலோ போட்ட பில் ₹ 6 கோடி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை