உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராஜ்யசபா தேர்தல்; முதல்வர் முன்னிலையில் கமல், தி.மு.க., வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

ராஜ்யசபா தேர்தல்; முதல்வர் முன்னிலையில் கமல், தி.மு.க., வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

சென்னை: ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பு மனுவை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், தி.மு.க., வேட்பாளர்கள் வில்சன், சல்மா, சிவலிங்கம் ஆகியோர் தாக்கல் செய்தனர். தி.மு.க., கூட்டணி கட்சியான ம.நீ.ம., தலைவர் கமல்ஹாசனும் வேட்பு மனு தாக்கல் செய்தார். தமிழகத்தில் ஆறு ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கு, வரும் ஜூன் 19ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.தி.மு.க., சார்பில் வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோரும், ம.நீ.ம., சார்பில் கமலும் போட்டியிடுகின்றனர். மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு, அ.தி.மு.க., சார்பில் வேட்பாளராக கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை, செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த அவைத்தலைவர் தனபால் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று (ஜூன் 06) ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பு மனுவை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், தி.மு.க., வேட்பாளர்கள் வில்சன், சல்மா, சிவலிங்கம் ஆகியோர் தாக்கல் செய்தனர். தி.மு.க., கூட்டணி கட்சியான ம.நீ.ம., தலைவர் கமல்ஹாசனும் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது கூட்டணி கட்சியை சேர்ந்த திருமாவளவன், செல்வபெருந்தகை ஆகியோர் உடன் இருந்தனர்.

அ.தி.மு.க.,வினர் வேட்புமனு தாக்கல்

ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பு மனுவை இ.பி.எஸ்., முன்னிலையில், அ.தி.மு.க., வேட்பாளர்கள் இன்பதுரை, செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த அவைத்தலைவர் தனபால் தாக்கல் செய்தனர். அப்போது, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், கே.பி., முனுசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Padmasridharan
ஜூன் 06, 2025 21:01

ஒற்றை இந்தியனாக ஆட்சி செய்வாரென்றெண்ணி பலரும் முன்பு வோட்டு போட்டனர் இவருக்கு ஆனால் இவரோ அஸ்தமிக்காமலிருக்க கூட்டணி வைத்துள்ளார். அடுத்து வரும் தேர்தலில் விஜயம் செய்யும் கட்சிக்கே வோட்டு போடுவர் மக்கள் நீதி கேட்டு


ஆரூர் ரங்
ஜூன் 06, 2025 20:00

இந்த புதிய வேட்பாளர் சல்மா வின் இரண்டாம் ஜாமங்களின் கதை நாவலைப் படித்து விட்டீர்களா? சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை விஞ்சும் வர்ணனைகள்.


சந்திரன்
ஜூன் 06, 2025 18:52

வைகோ அடுத்து கமல் அடுத்து ஜோசப்?


RAVINDRAN.G
ஜூன் 06, 2025 16:44

மக்களுக்கு எந்த பயனும் இல்லை. சிம்ப்ளி வேஸ்ட்


SRIRAM
ஜூன் 06, 2025 16:25

தமிழ் நாட்டு திமுக எம் பீ எல்லாம் என்ன பேசுவது என்று புரியாமல் இருக்கிறார்கள்.. இவர் பேசினால் என்ன பேசினார் என்று புரியாது


karupanasamy
ஜூன் 06, 2025 16:17

படுத்தே விட்டானய்யா. பிழைக்கும் மானஸ்த்தன் டார்ச்சை வாயில் கவ்வி பயிற்சி எடுத்திருப்பானோ.


Raj Kamal
ஜூன் 06, 2025 15:26

கூத்தாடி என்றால் கேவலமான வார்த்தையா?


குடிகாரன்
ஜூன் 06, 2025 15:23

களவாணிக் கூட்டத்தின் கைகளில் தமிழக குன்றியம்


Murugesan
ஜூன் 06, 2025 15:04

அயோக்கியனுங்க கூட்டம், கழிசடைகளுக்கு மானம் ரோசம் கிடையாது,தமிழகம் அயோக்கியனுங்க கைககளில்


Samy Chinnathambi
ஜூன் 06, 2025 15:03

மானஸ்தன் மானத்தை விற்ற நாள்


புதிய வீடியோ