மேலும் செய்திகள்
தேர்தல் கமிஷன் செய்யும் சதி: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
4 hour(s) ago | 24
தேனி : தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த ராஜ்குமார் 45, தாய்லாந்தில் ராமர், அயோத்தி கோயில் படம் பொறித்த கொடியுடன் ஸ்கை டைவிங் செய்தார்.அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பல்வேறு நாடுகளில் நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடந்தன. ராஜ்குமார் ஓய்வு பெற்ற கப்பற்படை வீரர். 'ஸ்கை டைவிங்' பயிற்சி பெற்றுள்ள இவர் 2016ல் ஜனாதிபதி விருது பெற்றுள்ளார். ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் 10 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்தார். அப்போது அயோத்தியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ராமர் கோயில், ராமர் உருவப்படம், ஜெய் ஸ்ரீராம் திருநாமம் பொறித்த கொடியுடன் குதித்து தரையிறங்கினார்.அவர் கூறியதாவது: இதுவரை 15ஆயிரம் முறைக்கு மேல் ஸ்கைடைவிங் செய்துள்ளேன். ராமர் கோயில் திறப்பு விழா அன்று இந்தியாவில் இந்த சாதனை நிகழ்த்த திட்டமிட்டேன். அனுமதி வழங்குவதில் தாமதம் ஆனதால் தாய்லாந்தில் இச்சாதனையை நிகழ்த்தினேன் என்றார்.
4 hour(s) ago | 24