உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமர் கோவில் கும்பாபிஷேகம் பா.ம.க., நிறுவனருக்கு அழைப்பு

ராமர் கோவில் கும்பாபிஷேகம் பா.ம.க., நிறுவனருக்கு அழைப்பு

விழுப்புரம் : அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ், பா.ம.க., நிறுவனர் ராமதாசிற்கு வழங்கப்பட்டது.உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீராம ஜென்மபூமி கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இவ்விழா அழைப்பிதழ், முக்கிய பிரமுகர்களுக்கு விழா குழுவினர் வழங்கி வருகின்றனர்.அதன்படி ஆர்.எஸ்.எஸ்., வடதமிழக பொறுப்பாளர் செந்தில், விழுப்புரம் வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் ராஜேந்திரன், மாவட்ட பொதுச் செயலாளர் எத்திராஜ் ஆகியோர் நேற்று, திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாசை சந்தித்து, ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ