மேலும் செய்திகள்
ரம்ஜான் சிந்தனைகள்-12
13-Mar-2025
ஈத்துவக்கும் இன்பப் பெருநாளான ரம்ஜான் பண்டிகையை கொண்டாட இருக்கிறோம். நோன்பு இருந்து இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்ததன் மூலம், அவனிடம் இருந்து கருணையைப் பரிசாகப் பெற்றுக் கொண்டோம். சுவனத்தின் பாதையை தேர்ந்தெடுத்து உள்ளோம். பசியின் கொடுமையை உணர்ந்து, ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற தத்துவத்தை உணர்ந்திருக்கிறோம். அதே நேரம் ரம்ஜான் பண்டிகையை எளிமையாக கொண்டாட வேண்டும். இதையே நபிகள் நாயகமும் வலியுறுத்துகிறார். எனவே எளிமையாக கொண்டாடி இறையருளைப் பெறுவோம். அனைவரது உள்ளத்திலும், இல்லத்திலும் மகிழ்ச்சியும் வளமும் பெருகட்டும். முடிந்தால் ரம்ஜான் மாதம் முடிவுற்று ஷவ்வால் மாதத்தில் ஆறு நாட்கள் நோன்பு நோற்பது சிறப்பு. 'யார் ரம்ஜான் மாதத்தில் நோன்பு நோற்று, பிறகு ஷவ்வாலில் ஆறு நாட்கள் நோன்பு வைக்கிறாரோ, அது காலம் முழுவதும் நோன்பு இருந்ததற்கு சமம்' என்கிறார் நபிகள் நாயகம். இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணி
13-Mar-2025