உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

சென்னை:'ஆன்லைன்' சூதாட்ட தற்கொலைகளை தமிழக அரசு வேடிக்கை பார்க்காமல் அதற்குதடை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:துாத்துக்குடி ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சிலோன் காலனியை சேர்ந்தவர் அருண்குமார். ஆன்லைன் சூதாட்டத்தில், பணத்தை இழந்ததால், தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீண்டு வர முடியாது என்பதற்கு, இது தான் கொடிய எடுத்துக்காட்டு.பா.ம.க., நடத்திய தொடர் போராட்டங்கள் காரணமாக ஆன்லைன் சூதாட்டம் இருமுறை தடை செய்யப்பட்டது.ஆனாலும், அந்த தடையை நீதிமன்றத்தில் நியாயப்படுத்த தமிழக அரசு தவறியது. இதனால்தான் ஆன்லைன் சூதாட்டம், லட்சக்கணக்கான குடும்பங்களை மீள முடியாத கடன் வலையில் சிக்க வைத்திருக்கிறது.ஆன்லைன் சூதாட்டதற்கொலைகளுக்கு முடிவு கட்ட ஒரே வழிசென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றத்தில் தடை பெறுவது.இன்னும் எத்தனை உயிர்கள் பலியாவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கப் போகிறது; இனியும் தாமதிக்காமல் உச்ச நீதிமன்றத்தில் 'ஆன்லைன்' சூதாட்டத்திற்கு தடை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை