சென்னை : அரசியலுக்கு வயது கிடையாது; அன்புமணியுடன் பேசியது ரகசியம்; நல்ல செய்தி விரைவில் வரும் என, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=o92lyjv0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அரசியலுக்கு வயது கிடையாது. கருணாநிதி 95 வயது வரை அரசியலில் இருந்தார். சக்கர நாற்காலியில் அமர்ந்து முதல்வராக செயல்பட்டார். உலக அளவில் மகாதீர் முகமது 92 வயதில், மலேஷியாவின் பிரதமராக இருந்தார். அதனால், அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வயது கிடையாது. வயது என்பது வெறும் எண் மட்டுமே.விரைவில் நல்ல செய்தி வரும். நான் சென்னையில் இருக்கும் போது வருமா, தைலாபுரம் தோட்டம் சென்ற பிறகு வருமா என்பது தெரியாது. நான் பல தலைவர்களோடு, பிரதமர்களோடு நெருங்கி பழகியிருக்கிறேன். பிரதமர் மோடி எனது நெருங்கிய நண்பர். உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, நான் சந்தித்தது இல்லை. ஆனால், அவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தியாவை உலகின் முதல் நாடாக்க பிரதமர் மோடியும், அமித் ஷாவும் இணைந்து செயல்படுகின்றனர். அதனால், அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.பா.ம.க.,வில் நடக்கும் குழப்பங்களால் தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு சோர்வு வராது. அவர்கள் எதிர்பார்க்கும் நல்ல செய்தி விரைவில் வரும். கூட்டணி யாரோடு, எப்போது எப்படி அமையும் என்பதை, இப்போது சொல்ல முடியாது. இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் தெரிய வரும். தேசிய கட்சி, மாநில கட்சி என எந்த கட்சியுடனும் வேண்டுமானாலும் கூட்டணி இருக்கலாம்.ஆடிட்டர் குருமூர்த்தியை தைலாபுரத்திலும் சந்தித்தேன்; சென்னையிலும் சந்தித்தேன். தைலாபுரத்தில் அன்புமணியுடன் பேசியது ரகசியம். அதை இப்போது சொல்ல முடியாது. நேரம் வரும்போது தானாகவே அது வெளிப்படும். இவ்வாறு அவர் கூறினார்.- ராமதாஸ், நிறுவனர், பா.ம.க.,
முன்கூட்டியே தெரிந்திருந்தால்
ஜோதிடம் படித்திருப்பேன்நடிகர் விஜய் கட்சி துவங்கி இருக்கிறார்; அவர் வெற்றி பெறுவாரா என கேட்கின்றனர். நடிகர் விஜய்க்கு கட்சி துவங்கியபோதே வாழ்த்து சொன்னேன்; இப்போதும் சொல்கிறேன்.எனக்கு ஜோதிடம் தெரியாது. அப்படியொரு படிப்பு இருக்கு என்று தெரிந்திருந்தால், நான் மருத்துவம் படித்ததற்கு பதிலாக ஜோதிடம் படித்திருப்பேன்.இருபத்தைந்து வாரங்களாக வியாழன் தோறும் பத்திரிகையாளர்களை சந்தித்திருக்கிறேன். இது, வேறெந்த அரசியல்வாதியும் செய்யாதது. பா.ம.க.,வின் இறங்கி வரும் செல்வாக்கை அதிகரிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அதற்கான பணிகளை செய்து வருகிறோம். பா.ம.க., பலம் பெறும்.