உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின் வாரியத்தில் தொடரும் மறுபணிநிரவல்; பறிபோகும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு

மின் வாரியத்தில் தொடரும் மறுபணிநிரவல்; பறிபோகும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விருதுநகர்: தமிழகத்தில் மின் வாரியத்தில் புதிய துணை மின் நிலையங்களுக்கு புதிய பணியிடங்களை அறிவிக்காமல், பழைய மின் பொறியாளர்கள், அலுவலர்களையே பணிநிரவல் செய்வதால் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பறிபோகும் அபாயம் உள்ளது.தமிழக மின் வாரியத்தில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஓய்வு பெறுவோர் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய பணியிடங்கள் நிரப்பப்படுவதுமில்லை. புதிதாக துணை மின் நிலையங்கள் துவங்கப்பட்டாலும், புதிய பணியிடங்கள் அறிவிக்காமல் வேறு இடங்களில் இருந்து பணிநிரவல் மூலம் நிரப்புகின்றனர்.விருதுநகர் கோட்டூரில் 765 கே.வி., புதிய துணை மின் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு செயற்பொறியாளர், 5 உதவி செயற்பொறியாளர்கள், 5 இணை பொறியாளர், ஒரு போர்மேன், லைன் இன்ஸ்பெக்டர்கள் 4, தொழில்நுட்ப உதவியாளர் 8, கள உதவியாளர் 8 என 32 பணியிடங்கள் தேவை. இதில் ஒருவர் கூட புதிதாக நியமிக்கப்படவில்லை.ஒவ்வொரு புதிய துணை மின் நிலையங்கள் துவங்கும் போதும் இதுதான் நடக்கிறது. இதனால் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோகிறது. மின் பொறியாளர் குழும பொது செயலர் ராஜ்குமார் கூறியதாவது:பணிநிரவலால் பதவி உயர்வும் பறிக்கப்படும். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும் பறிக்கப்படுகிறது. இளைய தலைமுறைக்கு வேலை வழங்குவது அரசின் தார்மீக கடமை. இந்த செயல் அதில் இருந்து நழுவி செல்வது போன்றுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Bhaskaran
ஜன 15, 2025 10:59

எல்லாம் அவுட் சோர்சிங் தனியார் மயம் அவங்க ஒழுங்கா வேலை பாப்பாங்க லஞ்சம் கேட்க மாட்டாங்க. இனி எல்லா துறைகளும் வருங்காலத்தில் இப்படித்தான்


sankaranarayanan
ஜன 15, 2025 08:56

வேலை வாங்கித்தருகிறேன் என்று பணம் பெற்றுக்கொண்ட அமைச்சர்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்


அப்பாவி
ஜன 15, 2025 08:51

எதுக்கு புதுப் பணியாளர்கள்? ஸ்மார்ட் மீட்டர் வந்தாச்சு. செயற்கை நுண்ணறிவு வந்தாச்சு. இருக்குற வேலையையே காலி பண்ணனும்.


Dharmavaan
ஜன 15, 2025 08:18

இது பழைய முறை தேவைகள், இப்போது தேவையில்லை..நிரந்தர பணியாளன் எவனும் ரிப்பேர் செய்யும்போது வேலை செய்வதில்லை அரட்டைதான்.நஷ்டத்துக்கு இதுவும் காரணம். இப்போது உள்ள டெக்நாலஜியில் இவ்வளவு தேவை இல்லை


visu
ஜன 15, 2025 08:10

குறைந்த ஊழியர்களுடன் சிறப்பாக பணியாற்றினால்தான் எந்த நிறுவனமும் லாபத்தில் இயங்க முடியும் .இல்லாவிட்டால் நட்டத்தை ஈடுகட்ட மக்கள் வரிப்பணம்தான் செலவாகும் .உதாரணமாக புதிய அரசு ஊழியர்களை எடுத்தால் மின் கட்டணம் உயரும் முடிந்தவரை தேவையற்ற அரசு ஊழியர்களை குறைத்தால்தான் மக்களுக்கு நல்லது


Kasimani Baskaran
ஜன 15, 2025 07:03

பாட்டியை பிடிப்பதிலும், சேற்றை வீசியவர்களை கண்டுபிடிப்பதில் முழு அரசு இயந்திரமும் பிஸி.. ஆகவே நோ புதிய வேலை வாய்ப்பு. முடிந்தால் வடக்கன்களிடம் வேலைக்கு சேரவும்.


அன்பே சிவம்
ஜன 15, 2025 06:31

மின் வாரியத்தில் நேர்மை என்பது உலகறிந்த விஷயம். ஆனால் மின் நிலையங்கள், துணை மின் நிலையங்கள் தொடங்கும் போது இருபது முப்பது வருடங்கள் முன்பிருந்த முறையில் ஒவ்வொரு நிலைக்கும் இத்தனை ஆட்கள் தேவை என்று இன்று உள்ள நிலையில் சொல்ல முடியாது. தொண்ணூறுகளிலேயே முழு மின் நிலைய வேலைகள் தானியங்கி முறைக்கு வந்து விட்டது. Control System என்கிற தானியங்கி கணினிகள் அனைத்து வேலைகளையும் மேற்கொள்ளும். சிறு தவறு நடந்தால் கூட அபாயமணி ஒலிக்கும். பெரும் தவறாக இருந்தால் மின் விநியோகத்தையே துண்டித்து விடும். அதனால் மின் நிலையத்திற்கு எவ்வித ஆபத்தும் இல்லை. மேலும் மின் நிலைய தளவாடங்களை வழங்கும் நிறுவனங்களே உத்திரவாத காலம் முடிந்தபின் அவர்களே வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தத்தின் கீழ் அவர்கள் ஊழியர்கள் மூலம் பராமரிப்பு பணிகளையும் உபரி தளவாடங்களையும் வழங்கி விடுவார்கள். அவர்களை மேற்பார்வை இடும் வேலை மட்டும்தான். அதனால் ஒரு பெரிய பணியாளர்கள் கூட்டம் துணை மின் நிலையங்களுக்கு தேவை இல்லை. அவர்கள் குறிப்பிடும் அதிகாரிகள் தேவையில் நான்கில் ஒரு பங்கே அதிகம். எல்லாம் கணினி முறைப்படி ஆன பின் உட்கார்ந்து சம்பளம் பெற ஒரு கும்பல் எதற்கு?


நிக்கோல்தாம்சன்
ஜன 15, 2025 06:21

மாதம் 30000 கோடி மாத்திரம் மருமகன் மகனுக்கு சென்றுவிட வேண்டும்


Varadarajan Nagarajan
ஜன 15, 2025 05:55

இந்த புதிய பணியிடங்களுக்கு ரேட் நிர்ணயம் ஆனபிறகுதான் நிரப்புவார்களோ? மின் வாரியத்தில் களப்பணியில் ஆள் பற்றாக்குறை நிலவுகின்றது. இதனால் மின் தடங்கல்களைக்கூட சரிசெய்ய கால தாமதம் ஆகின்றது. மின் தடங்கல்களை குறைக்க எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் டெவெலப்மெண்ட் பணிகள் எதுவுமே நடைபெறுவதில்லை


சமீபத்திய செய்தி