உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின் வாரியத்துக்கு ரூ.850 கோடி கடன் வழங்குகிறது ஆர்.இ.சி.,: அசாத்திய துணிச்சல்

மின் வாரியத்துக்கு ரூ.850 கோடி கடன் வழங்குகிறது ஆர்.இ.சி.,: அசாத்திய துணிச்சல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: புதிய துணைமின் நிலையங்கள் அமைக்க, மின் வாரியத்துக்கு, 850 கோடி ரூபாய் கடன் வழங்க, ஆர்.இ.சி., நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. தனியாரிடம் இருந்து, அதிக மின்சாரம் கொள்முதல் செய்தல், புதிய மின் திட்டங்களை குறித்த காலத்தில் செயல்படுத்தாததால் வட்டி செலவு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், தமிழக மின் வாரியம் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. இதனால், புதிய மின் நிலையம், துணைமின் நிலையம் உள்ளிட்ட மின் திட்டங்களை செயல்படுத்த போதிய நிதி இல்லாமல் சிரமப்படுகிறது. எனவே, மின் திட்டங்களுக்கும், நடைமுறை மூலதன செலவுகளை சமாளிக்கவும், மத்திய அரசின் ஆர்.இ.சி., - பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன், அரசு மற்றும் தனியார் வங்கிகளிடம் இருந்து கடன் வாங்கப்படுகிறது. தற்போது, மின் வாரியத்திற்கு, 1.75 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. இந்த சூழலில், மாநிலம் முழுதும் சீராக மின் வினியோகம் செய்ய, 110 கிலோ வோல்ட் திறனில், 54 துணைமின் நிலையங்களை, மின் வாரியத்தின் துணை நிறுவனமான, மின் தொடரமைப்பு கழகம் அமைக்க உள்ளது . இதற்காக, ஆர்.இ.சி., நிறுவனத்திடம், மின் வாரியம் 850 கோடி ரூபாய் கடன் கேட்டது. இந்த கடனை வழங்க, தற்போது, ஆர்.இ.சி., ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு, 9.25 சதவீத ம் ஆண்டு வட்டி. எனவே, துணைமின் நிலையங் கள் அமைக்கும் பணியை விரைவில் துவங்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Ramesh Sargam
அக் 23, 2025 09:59

கடன் என்றாலே அது தமிழக மக்கள் மீது விழும் ஒரு பலத்த அடி. ஏற்கனவே ஓவ்வொரு தமிழக மக்கள் மீதும் பல லட்சம் கடன் சுமை உள்ளது. அவை எல்லாம் அரசின் கையாலாகாத்தனத்தை காட்டுகிறது. இருந்தும் மக்கள் மீது இப்படி கடன் வாங்கி வாங்கி மக்கள் மீதான கடன் சுமையை இந்த திமுக அரசு அதிகரிக்கிறது. மக்களுக்கு இதெல்லாம் தெரிவதில்லை, சொன்னாலும் புரிவதில்லை. திருட்டு திமுகவினர் தேர்தல் நேரத்தில் கொடுக்கும் இலவசங்களை பெற்றுக்கொண்டு, தலை மீது உள்ள கடன் சுமை தெரியாமல் இருக்கின்றனர் தமிழக மக்கள். இவர்களுக்கெல்லாம் எப்படி சொல்லி புரியவைப்பதோ?


duruvasar
அக் 23, 2025 08:12

இந்த கடனை ஆக்க பூர்வமாக செலவிட தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 3 பேர் அடங்கிய உயர்மட்ட ஆலோசனை குழு அமைக்கப்படும்.


Venugopal S
அக் 23, 2025 07:47

தமிழக மின் வாரியத்துக்கு தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு குறைந்த வட்டியில் ஆயிரக்கணக்கான கோடிகள் கடன் கொடுத்துள்ளனர்.தோற்கும் குதிரையின் மீது எவரும் பணம் கட்ட மாட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.


ஆரூர் ரங்
அக் 23, 2025 16:13

மின்வாரிய அலுவலக மேசை நாற்காலி வரை வங்கி அடமானம். மேலும் பவர் ஃபைனான்ஸ் கார்பரேஷன் மூலம் டெபாஸிட் என்ற பெயரில் தலைக்கு மீறிய கடன். பல உள்ளாட்சிகளும் கட்டண பாக்கி. ஆக அரசு வணிகம் செய்தால் மக்கள் பிச்சைதான் எடுப்பார்கள்.


D Natarajan
அக் 23, 2025 06:41

அருமை. திராவிடன் REC லும் புகுந்து விட்டான் . 850 கோடியும் ஸ்வாகா


Kannan Chandran
அக் 23, 2025 05:50

17500000000000 -ரூபாய் கடனுக்கு வட்டி மட்டுமே மாதம் 1400 கோடி, எனினும், ஆக கடனை ஒரே மாதத்தில் அடைக்க திமுக பொருளாதார புலிகளை கொண்ட குழுவை அமைக்கும், ஆக திமுக-விற்கே எங்கள் ஓட்டு..


Indhuindian
அக் 23, 2025 05:24

தலைக்கு மேலே வெள்ளம் போனால் ஜான் என்ன முஷம் என்ன


Modisha
அக் 23, 2025 05:08

7 மாசம் கழிச்சி கொடுங்களேன், இப்போ வேண்டாம்.


Kudandhaiyaar
அக் 23, 2025 01:13

தி மு க வை மீண்டும் ஆட்சியில் அமர்த்த காசு கொடுத்துவிட்டது.


Vijay,covai
அக் 23, 2025 00:41

Dravida model achievement ,200ups nalla muttu Kudunga


சமீபத்திய செய்தி