உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்; நிவாரண முகாம்களை தயாராக வைத்திருங்க; முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்; நிவாரண முகாம்களை தயாராக வைத்திருங்க; முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில்,நேற்று தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது அதற்கடுத்து இரு நாட்களில் வடக்கு- வடமேற்கு திசையில் நகரக்கூடும். இது நாளை புயலாக மாற வாய்ப்பு உள்ளது.இதனால், இன்றுமயிலாடுதுறைநாகைதிருவாரூர்காரைக்கால் மாவட்டங்களில் அதிகனமழையும், ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும்சென்னைதிருவள்ளூர், காஞ்சிபுரம்செங்கல்பட்டு, விழுப்புரம்,கடலூர்அரியலூர்தஞ்சாவூர்புதுக்கோட்டைசிவகங்கைராமநாதபுரம்புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்கள்ளக்குறிச்சிபெரம்பலூர்திருச்சிதூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.நாளைகடலூர்மயிலாடுதுறைகாரைக்காலில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும், ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும்சென்னைதிருவள்ளூர்காஞ்சிபுரம்செங்கல்பட்டுவிழுப்புரம்அரியலூர்திருவாரூர்நாகைதஞ்சாவூர்புதுக்கோட்டைபுதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்ராணிப்பேட்டைதிருவண்ணாமலைகள்ளக்குறிச்சிபெரம்பலூர்திருச்சிசிவகங்கைராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.சென்னையில்,சென்னை மற்றம் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி , மின்னலுடன் கூடிய கன மிக கனமழை பெய்யக்கூடும். வெப்பநிலை 25- 26 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும்.அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன - மிக கனமழை பெய்யக்கூடும். வெப்பநிலை 25- 26 டிகிரி செல்சியதை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும்.26, 27 தேதிகளில் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல், தென் மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர, மத்திய மேற்கு வங்கக்கடல், தென்மேற்குவங்கக்கடல் அரபிக்கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

முதல்வர் ஆலோசனை

கனமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்ட கலெக்டருடன் முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். ஆலோசனையில் தலைமை செயலாளர் முருகானந்தம், பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பங்கேற்றனர். கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: வெள்ள நீர் தேங்கி பயிர்கள் சேதமடைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.* தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு அழைத்து செல்ல வேண்டும்.* மின்சார வசதி தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.* நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும். இவ்வாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

வைகுண்டேஸ்வரன்
நவ 26, 2024 22:30

எதிர்மறை சிந்தை உள்ள மனிதர்களைத் திருத்தவே இயலாது. லைன் மேன், EB என்ஜினீயர்களின் கஷ்டங்கள் முதல்வருக்கு மட்டுமல்ல, அவரோட வீட்டு வாட்ச்மேனுக்கும், சும்மா ரோடில் போறவனுக்கு கூடத் தெரியுமே. இப்ப அதுக்கு என்ன?


Barakat Ali
நவ 26, 2024 20:47

மின்சார வசதி தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ............. இதைச் சொன்ன உமக்கு பொறியாளர்கள், லைன் மேன் சந்திக்கும் பிரச்னைகள் பற்றித்தெரியுமா ????


Ramesh Sargam
நவ 26, 2024 20:24

நிவாரண முகாம்களை தயாராக வைத்திருங்க: முதல்வர். ஏதாவது அசம்பாவித் நடந்தால் தருவதற்கு நிவாரண நிதியுடன் தயாராக உள்ளேன்.


அருண், சென்னை
நவ 26, 2024 18:23

தலைப்பு சூப்பர்... நிவாரண முகாம் தயாராக வைக்கவும் ... யாரு? மக்களா? அரசா?


SUBBU,MADURAI
நவ 26, 2024 19:37

முதல்வருக்கு யாராவது ஞாபகப் படுத்துங்கப்பா! ஐயா இது நீங்க போன வருஷம் சென்னையில் நடந்த மழை வெள்ளத்துக்கு முன்பு பேசிய டயலாக், அதே துண்டு சீட்டையே மறுபடியும் உங்ககிட்ட இந்த வீணா போன அதிகாரிங்க கையில் கொடுத்துட்டாங்க என்று...


என்றும் இந்தியன்
நவ 26, 2024 17:33

ரோல் மாடல் என்றால் தான் நல்லது செய்து மற்றவர்களுக்கு வழிக்காட்டுபவன். திருட்டு திராவிட மடியல் அரசில் இதோ உதாரணம் "நீ செய்" "நான் சொல்லி விட்டேன்" ஆனால் நடப்பது ஒன்றுமே இல்லை???எல்லாம் நடந்து முடிந்த பின் அதற்கு முட்டு கொடுப்பது, அப்படியில்லை இப்படியில்லை என்று???


ஆரூர் ரங்
நவ 26, 2024 17:00

அடுத்த பேக்கேஜ் முகாம் போட்டு?டோப்பா, முகமூடி போட்டு?.


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 26, 2024 16:09

கலெக்டர்களுக்கு ஆலோசனைகளும் சொன்னார் ..... சுழன்று சுழன்று பணிபுரிகிறார் ..... இந்திய முதல்வர்களிலேயே இது போல ஒருவர் செயல்பட்டதில்லை .... இனி செயல்படப் போவதுமில்லை ..... - திமுக கொத்தடிமைகள் மனம் மகிழ ஒரு கருத்துப் போட்டுட்டேன் .....


Duruvesan
நவ 26, 2024 14:49

ஆக இது தான் திராவிட மாடல், வானத்துக்கே விடியல் தந்த கர்த்தரின் சீடர் வாழ்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை