உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்று 5 மாவட்டங்கள், நாளை 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்; வானிலை மையம் அப்டேட்

இன்று 5 மாவட்டங்கள், நாளை 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்; வானிலை மையம் அப்டேட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் இன்று (நவ.,29) 5 மாவட்டங்களுக்கும், நாளை (நவ.,30) 7 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த சில மணி நேரத்தில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gpnrrykb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0* செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, நாகை ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று (நவ.,29) அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. *சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி ஆகிய 7 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 21 செ.மீ.,க்கும் மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று (நவ.,29) ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. பெரம்பலூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 3 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. சென்னைக்கு நாளை ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளதால், அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

RAVINDRAN.G
நவ 29, 2024 15:32

4000 கோடி செலவு பண்ணி எல்லாம் சரிபண்ணிச்சு . எது வந்தாலும் சென்னை ஒன்னும் ஆகாது. மேயர் பிரியா இருக்க பயம் எதற்கு.சென்னை வாசிகளே தைரியமா காரை வீட்லயே வச்சுக்கோங்க. மேம்பாலத்துல எத்தாதீங்க.


MARI KUMAR
நவ 29, 2024 15:18

கனமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயாராக வேண்டும். நிறைய பிரியா தெளிவாக சொல்லிவிட்டார் இதனால் கவலையும் இல்லை


புதிய வீடியோ