உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவை, நீலகிரிக்கு ரெட் அலெர்ட்; 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!

கோவை, நீலகிரிக்கு ரெட் அலெர்ட்; 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கோவை, நீலகிரிக்கு இன்று (டிச.,02) அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை, நீலகிரிக்கு இன்று (டிச.,02) அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இதனால் 200 மி,மீட்டருக்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wi5p9r2x&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று (டிச.,02) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இதனால், 115.6 மி.மீட்டர் முதல் 201.4 மி.மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.அதேபோல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், கரூர், மதுரை, விருதுநகர், தென்காசி ஆகிய 10 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், 64.5 மி.மீட்டர் முதல் 115.5 மி.மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ديفيد رافائيل
டிச 02, 2024 17:58

Coimbatore and Theni மாவட்டங்களில் மழைக்கான அறிகுறியே இல்லை.


sundarsvpr
டிச 02, 2024 17:28

பெய்திடும் மழை நீரை பூமி உள்வாங்கவில்லை என்பது சத்தியமான உண்மை வீதி பாதைகளை உயர்த்த உயர்த்த சேதம் உடல் அமைதி உட்பட அதிகமாகிறது என்பது உண்மை. கூட்டு குடும்பம் அனுசரித்தால் தேவையற்ற கட்டடங்கள் குறையும். நீர் தடுப்பு இல்லாமல் செல்லும். வெகு காலங்களுக்கு முன் ஒவ்வொரு வீட்டு வாசல்களில் குப்பை செத்தை போடாத அசிங்கம் செய்திடாத ஆழமான சாக்கடை இருந்துள்ளன. இதனை அரசு பரிசீலிக்கலாம்.


MARI KUMAR
டிச 02, 2024 15:37

வானிலை மையம் கணிப்பு வர வர பலிப்பதில்லை. கோவையில் லேசான மழை கூட காணவில்லை


சமீபத்திய செய்தி