உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டத்தொடர் முழுதும் அதிமுக.,வினர் சஸ்பெண்ட்: பேச அனுமதி மறுப்பதாக இ.பி.எஸ்., குற்றச்சாட்டு

கூட்டத்தொடர் முழுதும் அதிமுக.,வினர் சஸ்பெண்ட்: பேச அனுமதி மறுப்பதாக இ.பி.எஸ்., குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ‛‛விதிப்படி கடிதம் கொடுத்தாலும், சட்டசபையில் பேச அனுமதி மறுக்கப்படுகிறது '' என எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கூறினார்.

சஸ்பெண்ட்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு விவாதிக்க வேண்டும் எனக்கூறி அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவர்கள் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அமளியில் ஈடுபட்டதால், இந்த கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rmr0ubct&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

வலுக்கட்டாயம்

சட்டசபைக்கு வெளியே நிருபர்களிடம் இ.பி.எஸ்., கூறியதாவது: கள்ளச்சாராய விவகாரம் பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்பதால் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விவாதிக்க சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தோம். விதிகளை பின்பற்றி கடிதம் கொடுக்குமாறு சபாநாயகர் கூறினார். அதன்படி கொடுத்தாலும் சபாநாயகர் பேச அனுமதி மறுக்கிறார். இந்த அரசு மக்களுக்கு நன்மை செய்யவில்லை. பல பேர் இறந்து குடும்பம் அனாதையாக நிற்கிறது. சபாநாயகர் நடுநிலையோடு செயல்படவில்லை; எங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி உள்ளார்.

அரசியல் கூடாது

சபாநாயகர் நடுநிலையோடு பேசவில்லை. அவரின் கருத்துகள் வேதனை அளிக்கிறது. சபாநாயகர் அரசியல் பேச வேண்டும் என்றால் ராஜினாமா செய்துவிட்டு பேச வேண்டும். அந்த இருக்கையில் அமர்ந்து நடுநிலையோடு பேச வேண்டும்

தேர்தலுக்காக

அதிமுக ஆட்சி காலத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். அதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது.ஜாதி வாரி கணக்கெடுப்பு 6 மாதங்களுக்குள் மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த குழுவின் கால அவகாசத்தை நீட்டிக்கவில்லை. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் அவசர அவசரமாக ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு மேற்கொள்ள தீர்மானம் கொண்டு வருகிறார். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு உரிமை உள்ளது. மற்றவர்களின் துயரத்தை பற்றி ஆளுங்கட்சிக்கு கவலையில்லை. சம்பிரதாயத்திற்காக சட்டசபை கூட்டத்தொடரை நடத்துகின்றனர். ஒரு நாளில் 5 மானிய கோரிக்கைகளை நிறைவேற்றுகிறார்கள். எப்படி பேச முடியும்?அவையில் நாங்கள் பேசுவதை தடுக்கின்றனர். பேச முடியாது எனக்கூறிவிட்டு முதல்வர் எப்படி 15 நிமிடங்கள் பேசுகிறார்? சட்டசபையில் அனைவருக்கும் ஒரே விதி. வேண்டும் என்றே திட்டமிட்டு நாங்கள் வெளியேறிய பிறகு பேசுகின்றனர். அதிமுக.,வினர் மக்கள் பிரச்னையை பற்றி பேசினால் குரல்வலையை நசுக்க முயற்சிக்கின்றனர்; இது ஜனநாயக படுகொலை. சட்டசபையில் ஆளும்கட்சிக்கு ஒரு நீதி; எதிர்க்கட்சிக்கு ஒரு நீதியாக இருக்கிறது. கள்ளச்சாராய மரணத்தை விட வேறு என்ன முக்கியமான பிரச்னைகள் இருக்கிறது?. இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ms Mahadevan Mahadevan
ஜூன் 26, 2024 13:53

எடப்பாடியாரின் கதை முடிந்தது 2026 எலேச்டின் கூட ஜெய்க்கமாட்டார்


SUBRAMANIAN P
ஜூன் 26, 2024 13:20

நல்ல நாடகம்.. உங்க கத முடிஞ்சிது.


N Srinivasan
ஜூன் 26, 2024 12:52

டெல்லியில் ஒரு பேச்சு இங்கே ஒரு பேச்சு.


குழலி
ஜூன் 26, 2024 12:37

இவர் பேச நினைற்றதையெல்லாம் சட்டமன்ற வளாகத்துக்கு வெளியே நின்னு பேசி முடிச்சி டி.வி லயும்.காட்டியாச்சு. இன்னும் எந்த உள்ளே போய் பேசப் போறாரு?


ஆரூர் ரங்
ஜூன் 26, 2024 11:49

நாயகருக்கு உள்ளூர ஒரு ஏக்கம். அதனால்தான் மந்திரிகள் அளிக்க வேண்டிய பதில்களை இவரே கூறுகிறார். அரசியல் பேசுகிறார்..தன் மதத்தை மட்டும் உயர்த்திப் பிடிக்கிறார். மந்திரியாக்கியிருந்தால் என்னென்ன செய்திருப்பாரோ?


Tamil Inban
ஜூன் 26, 2024 11:45

அப்படியே பேசிட்டாலும் கீத்துக்கு ரெண்டு மட்டையா கிழித்து போட்டுடுவாரு


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 26, 2024 11:42

ஆனால் மக்களவையில் கூச்சல், குழப்பம், சபாநாயகரின் இருக்கைக்கு அருகே சென்று அடாவடி, மசோதா நகலைக் கிழித்தெறிதல் ஆகிய அனைத்தையும் செய்ய காங்கிரஸ் திமுகவுக்கு உரிமை உண்டு. அவர்களை சஸ்பெண்ட் செய்யக் கூடாது...


Rengaraj
ஜூன் 26, 2024 10:33

பலம் வாய்ந்த எதிர்கட்சி நாங்கள்தான் என்று சொல்லி சமீபத்தில் வோட்டுக்கேட்டு மக்களை ஏமாற்றிய அண்ணா தி.மு.க கட்சிக்கு இந்த நிலைமை தேவைதான். அவர்கள் ஆக்கபூர்வ எதிர்க்கட்சியாக ஆரம்பம் முதல் இன்று வரை மக்களுக்காக செயல்படவில்லை. உள் குத்து, கள்ள கூட்டணி என்று இத்தனை நாட்கள் இருந்துவிட்டு இப்போது ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்படுகிறது என்று ஒப்பாரி வைக்கவேண்டிய தேவை என்ன? மக்கள் பிரச்சினை பற்றி பேசத்தான் சட்டசபை இருக்கிறது. அங்கே பேசமுடியவில்லை என்றால் பின் எதற்கு எம்.எல்.ஏ.க்கள்? இப்படி ஒப்பாரி வைப்பதற்கா மக்கள் வோட்டுப் போட்டார்கள்? பேசாமல் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா பண்ண வேண்டியதுதானே? சட்டசபை நிகழ்ச்சிகளை முழுவதும் நேரடியாக ஒளிபரப்பாதவரை உண்மையான ஜனநாயகம் பற்றி பேசுவதற்கு இங்கே யாருக்கும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, சமூக ஆர்வலர்கள், திரைப்படத்துறை மக்கள், ஊடகங்கள் உட்பட அருகதை இல்லை. வோட்டு பெற்று தேர்ந்தேடுக்கப்பட்ட எம்.எல் ஏ க்கள் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதன் காரணத்தை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு போராட இங்கே நாதியில்லை. ஜனநாயகம், அரசியல் அமைப்பு, சமூக நீதி, இவற்றை பற்றி வாய்கிழிய பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.


Thirunavukkarasu Sivasubramaniam
ஜூன் 26, 2024 10:33

எதேச்சாதிகார போக்கு எப்போதும் நல்லதல்ல


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி