உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மண்டல தலைவர்கள் ராஜினாமா: தி.மு.க., தலைமை உத்தரவு

மண்டல தலைவர்கள் ராஜினாமா: தி.மு.க., தலைமை உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாநகராட்சியில் வரிவிதிப்பு முறைகேடு தொடர்பாக மண்டல தலைவர்களான பாண்டிச்செல்வி, சரவண புவனேஸ்வரி, சுவிதா ஆகியோரிடமும் அவர்களின் கணவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4pb38swc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த விவகாரம் தொடர்பாக, அமைச்சர் நேரு தலைமையில் இன்று மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் கமிஷனர் சித்ரா விஜயன் ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் மேயர் இந்திராணிக்கு அமைச்சர் நேரு கடுமை எச்சரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.விசாரணை முடிவில், மண்டல தலைவர்கள் அனைவரையும் பதவி விலகும்படி தி.மு.க., தலைமை உத்தரவிட்டுள்ளது.கட்சி நிர்வாகிகளுடனான ஒன்-டூ-ஒன் 'உடன்பிறப்பே வா' நிகழ்ச்சியின் போது தேவையான இடங்களில் தயவு தாட்சண்யமின்றி பதவியைப் பறிப்பேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.இந்நிலையில், மதுரை மேயர் இந்திராணியின் கணவர் சமீபத்தில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாகவே மண்டல தலைவர்களை ராஜினாமா செய்யும்படி தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மதுரை தி.மு.க.,வில் நிலவும் கோஷ்டி பூசல்களும் இந்த விவகாரத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளதாக, விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

lana
ஜூலை 08, 2025 11:59

ஆக தப்பு நடந்தது உண்மைதான் என்று தத்தி ஒத்து கொள்கிறது பிறகு என்ன ஒரு மன்னிப்பு கேட்டால் முடிந்தது. இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது ஒன்றியம் குன்றிய ம் தமிழக உரிமை மீட்பு ன்னு அடிச்சு விட வேண்டும்


நாஞ்சில் நாடோடி
ஜூலை 08, 2025 09:44

ராஜினாமா ஒரு நாடகம்...


raja
ஜூலை 08, 2025 07:23

30000 கோடி கொள்ளை அடிச்சதா தியாகராஜன் என்ற அமைச்சர் கூறிய ... மக்கள் பதவி விலக வேண்டும் என்று ஆசை படுகிறார்கள் ....


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 08, 2025 05:03

ராஜாவை முதல்வர் நாற்காலியில் உட்கார வைத்தவர்கள் போடும் ஆட்டத்தை சமாளிக்க ராஜாவால் முடியவில்லை. இனி இளவரசரை முதல்வர் நாற்காலியில் அமர வைக்க பாடுபடுபவர்களை எப்படி ராஜா சமாளிக்க போகிறார்


Mani . V
ஜூலை 08, 2025 04:03

பாஸ், "குட்டி இளவரசரை முதல்வர் நாற்காலியில் அமர வைப்பதே எங்களின் வாழ்நாள் குறிக்கோள்" என்று உழைப்பவர்களுக்கு மட்டுமே இனி கட்சியில் இடம் உண்டு என்று கறாராகச் சொல்லி விடுங்கள்.


N Sasikumar Yadhav
ஜூலை 07, 2025 22:28

ஆறுமாதம் பயிற்சி அண்ணா அறிவாலயத்தில் தினமும் எடுத்திருந்தால் இதுபோல சிக்கி சின்னாபின்னமாக ஆகியிருக்க மாட்டிர்கள்