உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தட்டச்சு பள்ளிகளின் அரசாணையை ரத்து செய்யுங்க; தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்கம்

தட்டச்சு பள்ளிகளின் அரசாணையை ரத்து செய்யுங்க; தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திண்டுக்கல்: தட்டச்சு பள்ளிகளின் நிலை கேள்விக்குறியாகும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் தமிழக அளவில் ஒவ்வொரு ஆண்டும் பிப்., ஆக., மாதங்களில் இளநிலை,முதுநிலை தமிழ், ஆங்கிலம் தட்டச்சர், சுருக்கெழுத்தர், கம்ப்யூட்டர் ஆபீஸ் ஆட்டோமேஷன் தேர்வுகள் நடைபெறும். தட்டச்சர் பதவிக்கு தட்டச்சர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் சி.ஓ.ஏ., தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும். டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் தட்டச்சர் பதவிக்கு முன்னுரிமை வழங்கப்படும். சி.ஓ.ஏ., தேர்வு எழுதுவதற்கு கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சியும், தட்டச்சர் தேர்வில் ஆங்கிலம் அல்லது தமிழில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இந்நிலையில் அக். 28ல் வெளியான அரசாணையில் அடிப்படை கல்வித் தகுதி 10 ம் வகுப்பு அல்லது அதற்கு சமமானகல்வித்தகுதி என்று மட்டுமே உள்ளது. இது வரை 10 ம் வகுப்பு, தட்டச்சு (தமிழ், ஆங்கிலம்) இளைநிலை தேர்ச்சி என இருந்தது. இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என தமிழக வணிகவியல் பள்ளிகள் சங்கம்தெரிவித்துள்ளது.சங்கத்தின் மாநில தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன் கூறியதாவது:தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற 4750 தட்டச்சுப் பள்ளிகள் உள்ளன. தட்டச்சில் ஆண்டிற்கு 4 லட்சம் மாணவர்களும், கம்ப்யூட்டர் ஆபீஸ் ஆட்டோமேஷன் தேர்விற்காக ஆண்டிற்கு 40,000 மாணவர்களும் தட்டச்சுப் பள்ளிகளில் பயிற்சி மேற்கொள்கின்றனர். 5,000 ஆசிரியர்களும், 7500துணை ஆசிரியர்களும் பணியாற்றுகின்றனர். ஒரு லட்சத்திற்கும் மேலான ஆங்கிலம் , தமிழ் தட்டச்சுப் பொறிகள் செயல்படுகின்றன. 10,000 க்கு மேலான கணினிகளும்உள்ளன. தற்போதைய அரசாணையால் இவற்றின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. தட்டச்சுப் பொறியின் விசைப் பலகையில் பயிலாமல் நேரடியாக கணினியில் பயின்றால் விரல்களின் பயன்பாடு குறையும். பார்த்துப் பார்த்து தட்டச்சு செய்யும் நிலையும் உருவாகும். தட்டச்சுப் பொறியில் அடிப்படைப் பயிற்சியைப் பெறுபவர்கள் விசைப்பலகையினைப் பார்க்காமல் வேகமாகவும், பிழையின்றியும்தட்டச்சு செய்வர். இதனால் கால விரயம் தவிர்க்கப்படும். கம்ப்யூட்டர் ஆபீஸ் ஆட்டோமேஷன்பாட வகுப்புகள் 22 ஆண்டு காலமாக இருப்பது போன்று தட்டச்சுப் பள்ளிகளிலேயே அல்லது பாலிடெக்னிக் களிலேயே தொடர்ந்துநடத்தப்படும் என்கிற அறிவிப்பை அளிக்க வேண்டும். புதிய அரசாணையில்இதற்கான குறிப்பு ஏதும் வழங்கப்படவில்லை. எனவே பழைய நடைமுறையையே பின்பற்ற வேண்டும். இது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியனிடம் மனு அளித்துள்ளோம். அவரும் ஆவன செய்வதாக கூறினார் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ஆரூர் ரங்
நவ 12, 2024 11:46

வாய்ஸ் டைப்பிங் முன்னேற்றத்தால் விரைவில் தட்டச்சுத் திறமைக்கு மதிப்பிருக்காது. இப்போதெல்லாம் இளம் அதிகாரிகள் ரகசியக் கோப்புக்களை தாங்களே கணினியில் தட்டச்சு செய்து விடுகிறார்கள். தட்டச்சு ஊழியர்களுக்கு மாற்றுப் பணி அளிக்க வேண்டிவரும்


Bhaskaran
நவ 12, 2024 09:34

அமைச்சரை சங்கத்தின் சார்பில் நன்டகவனிச்சிட்டீங்கன்னா மறு வினாடி சட்டம் வாபஸ்


Sakthi
நவ 12, 2024 08:18

தட்டச்சு பயிலாமல் ஐடி துறையில் நுழையும் பணியாளர்களின் செயல் திறன் மிக மிக மோசம். டாக்குமெண்டஷன் என்பது ஐடி துறையில் மிக மிக முக்கியம். அதில் இவர்கள் பின்தங்கி உள்ளர்கள்


Muralidharan raghavan
நவ 12, 2024 12:52

correct


இறைவி
நவ 12, 2024 05:35

ஒன்றும் பிரச்சனை இல்லை. உங்கள் வணிகவியல் பள்ளிகள் சங்கத்தினர் வந்து பாருங்கள். நீட் தேர்வினால் தனியார் மருத்துவ கல்லூரிகள் மூலம் வரும் வருமானம் குறைந்தது விட்டது. நீங்கள் அரசுக்கு உண்டான ஆதரவை கொடுத்தால் ஆணையை திரும்பப் பெற்று விடுவோம். இம்மாதிரி பல தடை ஆணைகள் வெளியிடப்பட்டு திரும்ப பெறப்படும்.


Kasimani Baskaran
நவ 12, 2024 05:19

உலகில் தட்டச்சு தமிழகத்தில் மட்டுமே இருக்கும் போல தெரிகிறது. உலகமே கம்ப்யூட்டர் என்று ஆன பின்னரும் தட்டச்சை கட்டிக்கொண்டு அழுவது மட்டமான நடைமுறை.


Muralidharan raghavan
நவ 12, 2024 12:55

தட்டச்சு பயிலாமல் இருந்தால் கணினி உபயோகிக்கும்போது வேகம் இருக்காது. பல அரசு அலுவலகங்களில் இது காலதாமதத்தை ஏற்படுத்தும்


rama adhavan
நவ 12, 2024 05:00

சுருக்கு எழுத்து பள்ளிகள் தேவை. தட்டச்சு பள்ளிகள் கணினி உலகில் தேவையா?


சமீபத்திய செய்தி