உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ‛ரிப்பீட்டு... ரிப்பீட்டு...: கருணாநிதி காலம் முதல் ‛சாகாவரம் பெற்ற தி.மு.க., வாக்குறுதிகள்

‛ரிப்பீட்டு... ரிப்பீட்டு...: கருணாநிதி காலம் முதல் ‛சாகாவரம் பெற்ற தி.மு.க., வாக்குறுதிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கச்சத்தீவு மீட்கப்படும் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி காலம் முதல் தி.மு.க., கூறி வருகிறது. அதே வாக்குறுதி ஸ்டாலின் இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளது. மேலும், திருக்குறள் தேசிய நூலாக்கப்படும், இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்பன உள்ளிட்டவை மீண்டும் மீண்டும் இடம்பெற்றுள்ளது.சட்டசபை, லோக்சபா தேர்தலாக இருந்தாலும் கருணாநிதி காலம் முதல் பல வாக்குறுதிகள் இன்னமும் திமு.க.,வின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்று வரும் வினோதம் இந்த முறையும் நடந்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6amz4hq6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்த வகையில்,கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலை முன்னிட்டு தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில்,.*இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை*நீட் தேர்வு ரத்து*மாணவர்களின் கல்விக்கடன் ரத்து உள்ளிட்டவை இடம்பெற்று இருந்தது.அதேபோல், கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது, அக்கட்சியின் வாக்குறுதிகளில்,*மாநிலங்கள் சுயாட்சி பெற அரசியலமைப்பு சட்டத்தை திருத்தும்படி மத்திய அரசை வலியுறுத்துவோம்.*மாநில ஆட்சிமொழிகளாக உள்ள, தேசிய மொழிகள் அனைத்தும், மத்திய ஆட்சிமொழிகளாக்க வலியுறுத்துவோம்.*அனைத்து துறை பணியாளர் தேர்வுகளுக்கு, தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில மொழிகளிலும், எழுத்து மற்றும் நேர்முக தேர்வுகள் நடத்த முயற்சி*திருக்குறளை தேசிய நுாலாக அறிவிக்க செய்வோம்.*அகதிகள் முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு, இந்திய குடியுரிமை*சேது சமுத்திர திட்டம் நிறைவேற முயற்சிப்போம். *கச்சத்தீவை திரும்ப பெறும் முயற்சிகள் மேற்கொள்வோம்.*பெட்ரோல், டீசல் விலை குறைப்படும் எனக்கூறப்பட்டு இருந்ததுகடந்த லோக்சபா, சட்டசபை தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் ஸ்டாலின் இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் கூறிய தேர்தல் வாக்குறுதிகள், அக்கட்சி மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த பிறகும் இடம்பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

Ramesh Sargam
மார் 20, 2024 23:44

கருணாநிதி காலம் முதல், நாளை இன்பநிதி மற்றும் அவன் பேரப்பிள்ளைகள் காலம் வரை ஒரே பொய் வாக்குறுதிகள்தான். மக்கள் இந்த முறையாவது கருணாநிதியின் மகன் ஸ்டாலின் காலத்திலேயே திமுகவுக்கு சங்கு ஊதவேண்டும். இல்லையென்றால், இனபநிதி மற்றும் அவன் பேரப்பிள்ளைகள் என்று வம்சாவளியாக உங்களை அவர்கள் ஏமாற்றிக்கொண்டிருப்பார்கள். தமிழக மக்களே, உஷார்.


isvrajan
மார் 26, 2024 15:21

I appreciate your imagination Deadbeat is awaiting in the forthcoming elections Rest of their lives are reserved in prisons


isvrajan
மார் 26, 2024 15:21

I appreciate your imagination Deadbeat is awaiting in the forthcoming elections Rest of their lives are reserved in prisons


Balaji
மார் 20, 2024 21:41

நூறு ரூபாய்க்கு மூணு படி அரிசி? இல்லையா?


Jysenn
மார் 20, 2024 21:05

Three constant items of dmk are (1) periyaar (2) annathurai and (3) election manifesto. These three will never change.


வேங்கடசுப்பிரமணியன்
மார் 20, 2024 21:05

நாங்கள் எப்போதும் சொன்ன சொல் மாற மாட்டோம். வாக்குறுதியையும் மாற்ற மாட்டோம். மாற்றவும் விடமாட்டோம்


Raa
மார் 20, 2024 18:14

நாங்கள் எப்போதும் ஒரே மாதிரித்தான் சொல்லுவோம். இன்னிக்கு ஒரு பேச்சு நாளைக்கு ஒரு பேச்சு என்றெல்லாம் இல்லை. காப்பி-பேஸ்டு செய்வதில் நாங்கள் வல்லவர்கள்.


Rengaraj
மார் 20, 2024 17:17

தி.மு.க வாக்குறுதியை மட்டுமே நம்பி வோட்டுப்போடுவது சரியாகாது. அதை மற்ற கூட்டணிக்கட்சிகளும் ஆமோதிக்கவேண்டும். ஒருவேளை தி.மு.க வேட்பாளர் பிரதமர் வேட்பாளர் என்றால் இவர்கள் சொல்லுவதை ஏதோ நம்பலாம். இண்டியா கூட்டணி மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு வாக்குறுதிகளை வழங்கும். அவை அனைத்தையும் தொகுத்தால்மட்டுமே வாக்குதிகள் சாத்தியப்படுமா என்று பார்க்க முடியும். இவர்கள் ஆட்சிக்கு வந்தால் செய்வார்களா என்று எதை வைத்து நம்புவது. ?


Sankar Ramu
மார் 20, 2024 16:44

திராவிட மாடல் இதே அடுத்த ஐம்பது வருடம் வாக்குறுதி. ????????????


vidhya
மார் 20, 2024 15:59

ஒரு வடிவேலு ஜோக் ஞாபகம் வருது..."நாங்கெல்லாம் யாரு...ஓடற பஸ்லய கம்பிய புடிக்காம நிப்போம்ல"


theruvasagan
மார் 20, 2024 15:55

இண்டி கூட்டணிக்குன்னு ஒரு பொது தேர்தல் அறிக்கை இருக்கா இல்லியா. இந்த வாக்குறுதிகள் எல்லாம் அதில் இடம் பெற்றுள்ளதா. அப்பதான் அதுக்கு மதிப்பு நம்பகத்தன்மை கிடைக்கும்.


Babu
மார் 20, 2024 15:49

இதுலேயே பொதுமக்கள் நல்லா தெரிஞ்சிக்கலாம்.. நாங்க இந்த பிஜேபி மாதிரி மாத்தி மாத்தி பேசமாட்டோம்.. அவனுங்க போன அறிக்கையிலே ராமர் கோயில், 370, CAAன்னு சொன்னாங்க..


மேலும் செய்திகள்



புதிய வீடியோ