மேலும் செய்திகள்
வங்கி ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
18-Apr-2025
சேலம்:சேலம், வள்ளுவர் சிலை அருகே உள்ள, என்.ஜி.ஜி.ஓ., சங்க கட்டடத்தில், கோ - ஆப்டெக்ஸ் ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. பொதுச்செயலர் விஸ்வநாதன் தலைமை வகித்தார்.மே, 20ல் நடக்க உள்ள அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில், கோ - ஆப்டெக்ஸ் ஊழியர்கள் பங்கேற்பது; கைத்தறி ஜவுளிக்கு ஜி.எஸ்.டி., வரியில் இருந்து விலக்கு அளித்தல்; மருத்துவ காப்பீடு திட்டங்களுக்கும் வரியில் இருந்து விலக்கு அளித்தல்; மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகைகளை மீண்டும் அமல்படுத்தல்; 10 ஆண்டுகளாக பணியாற்றிய தற்காலிக ஊழியர், 200 பேர் வேலை இழந்ததால், முதல்வர் தலையிட்டு தீர்வு காணுதல் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பொருளாளர் குமார், செயலர்கள் நாவரசன், பெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
18-Apr-2025