உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 5 ஆண்டுக்கு 800 மெகா வாட் மின்சாரம் வாங்க அனுமதி கேட்பு

5 ஆண்டுக்கு 800 மெகா வாட் மின்சாரம் வாங்க அனுமதி கேட்பு

சென்னை: எதிர்கால மின் தேவையை பூர்த்தி செய்ய, ஐந்து ஆண்டுகளுக்கு, தினமும் 800 மெகா வாட் மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்கு, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், மின் வாரியம் அனுமதி கேட்டுள்ளது.தமிழக மின் தேவை தினமும் சராசரியாக, 16,000 மெகா வாட்டாக உள்ளது. இதை பூர்த்தி செய்ய, மின் வாரியத்தின் சொந்த மின் நிலையங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரம் போதவில்லை. இதனால், மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்தும், மின்சார சந்தைகளில் இருந்தும் கொள்முதல் செய்யப்படுகிறது.தற்போது, மத்திய மின் துறை வழிகாட்டுதலின் கீழ், தனியார் நிறுவனங்களிடம் இருந்து தினமும் 800 மெகா வாட் வீதம், ஐந்து ஆண்டுகளுக்கு மின்சாரம் கொள்முதல் செய்ய, ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கேட்டு, வாரியம் மனு செய்துள்ளது. இம்மனு, ஆணைய அலுவலகத்தில் உள்ள நீதிமன்ற அறையில், ஆணைய தலைவர் மணிவண்ணன், உறுப்பினர்கள் வெங்கடேசன், மோகன் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது.

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஓராண்டுக்கு குறைவான காலத்திற்கு மின்சாரம் வாங்கும்போது, யூனிட் 10 ரூபாய்க்கு கிடைக்கிறது. இதன் விலை, கோடை காலம் மற்றும் மாலை நேரங்களில் அதிகரிக்கிறது. நீண்ட காலத்துக்கு வாங்கும்போது, அதைவிட, குறைந்த விலைக்கு மின்சாரம் கிடைக்கும். மின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதை பூர்த்தி செய்வதற்காக, ஐந்து ஆண்டுகளுக்கு மின்சாரம் வாங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால், யூனிட் சராசரியாக, 7 ரூபாய்க்கு கீழ் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Gajageswari
ஜூலை 02, 2025 05:45

இப்படி வெளியே மின்சாரம் வாங்கி, தனியார் மாற்று முறை மின்சாரம் பயன்படுத்துபவர்களால் நஷ்டம் என்று பொய் கணக்கு காண்பித்து Suge என்ற போர்வையில் கொள்ளை அடிப்பது


Svs Yaadum oore
ஜூலை 01, 2025 07:13

16,000 மெகா வாட் மின்தேவையை பூர்த்தி செய்ய, வெளி மாநில தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் கொள்முதல். தமிழ் நாட்டின் மின் உற்பத்தி இங்குள்ள மின்தேவையை 30 சதம் கூட பூர்த்தி செய்யாது ..பல மின் திட்டங்கள் இங்கு மதம் மாற்றும் கும்பலால் நிறுத்தப்பட்டது..வடக்கன் மாநிலத்தில் இருந்து மின்சாரம் கொள்முதல்....அதில் பயங்கர கொள்ளை ...வாங்கும் விலை யூனிட் 10 ரூபாய், நீண்ட காலத்துக்கு வாங்கும்போது, யூனிட் சராசரியாக, 7 ரூபாய்.....இதில் எவ்வளவு லஞ்ச ஊழல் மற்றும் கொள்ளை?? மின் வாரிய கடன் மட்டும் 4 லட்சம் கோடிகள் .இதற்கு எவன் வட்டி கட்டுவது?? ..இதெல்லாம் எவன் அப்பன் வீட்டு பணம் ??.....


முக்கிய வீடியோ