உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓ.பி.ஆருக்கு சிலை வைக்க கோரிக்கை

ஓ.பி.ஆருக்கு சிலை வைக்க கோரிக்கை

திண்டிவனம்:''தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சர் ஓ.பி.ஆருக்கு சென்னையில் முழு உருவ வெண்கல சிலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ரெட்டி நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நேற்று, தமிழ்நாடு ரெட்டி நலச்சங்க மாவட்ட நிர்வாகிகள் செயற்குழு மற்றும் பொதுக்குழு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் கோகுல்தாஸ், பாலகுரு, ரவிச்சந்திரன், பெத்தராஜ், ராமசாமி, சுரேஷ், வழக்கறிஞர்கள் ரமணன், ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், தமிழ்நாடு ரெட்டி நலச்சங்க தலைவராக உட்லண்ட்ஸ் ரவி, செயலராக ராஜா பூர்ணசந்திரன், பொருளாளராக அருண்குமார், கவுரவ தலைவராக ராமச்சந்திரன் ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.தொடர்ந்து, தமிழகத்தின் முதல் முதல்வர் ஓ.பி.ஆருக்கு சென்னையில் முழு உருவ வெண்கல சிலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ரெட்டி சமூகத்திற்கு சட்டசபையில் கூடுதல் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Bhaskaran
டிச 15, 2024 13:07

ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்தியாவுடன் சேர்ப்பதற்கும் ரஜாக்கர்களை ஒடுக்குவதற்கும் ஓபிஆர் செய்த சேவை அளப்பரியது படேலை இதற்காக செய்தியாளர்கள் பாராட்டிய போது இந்த சாதனைக்கு முழுவதும் காரணகர்த்தா ஓபிஆர் தான் என்று மனமுவந்து பாராட்டினார்


V RAMASWAMY
டிச 15, 2024 09:34

தெருவுக்கு தெரு, ஊருக்கு ஊர், மகாத்மா காந்தியிலிருந்து, இன்றுள்ள தலைவர்கள் வரை சிலைகளாக வைத்து தள்ளிக் கொண்டிருக்கும் நிர்வாகம், அவர்களின் நல்ல எண்ணங்களையும் முயற்சிகளையும் பரப்பினால் போதாதா? சிலைகள் செலவு அதனை திறக்கும் விழா செலவு இவற்றை கணக்கிட்டால், இவற்றைக் கொண்டு பல நல்ல மக்கள் நல்வாழ்வு திட்டங்கள் அமுல்படுத்தினாலே அவர்களின் ஆன்மாக்கள் மகிழும். மக்களும் மகிழ்வார்கள். ஒப்பற்ற தலைவர்களின் சிலைகளை வைத்து அவைகள் கேட்பாரற்ற நிலையிலிருக்கும் நிலைகளை கண்கூடாக காண்கிறோம். இதனை தவிர்க்கும் வகையில் ஒரே ஊரில், அதாவது தலைநகரில் மட்டும் ஒரு சிலை மியூசியம் வைத்து தலைவர்களின் சிலைகள் வைத்து அவர்களைப்பற்றிய விபரங்கள், சாதனைகள் வெளியிட்டால் மக்கள் அறிந்துகொள்வார்கள். அதற்கு கட்டணம் கூட வசூலித்து பராமரிக்கும் செலவை ஈடு செய்துவிடலாம்.


நிக்கோல்தாம்சன்
டிச 15, 2024 06:01

இன்னமும் சிலை? , எங்கே அந்த கருப்புச்சட்டை கழகத்தினர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை