உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெளியில் எதிர்ப்பு; உள்ளே ஆதரவு; தி.மு.க.,-பா.ஜ.,வை சொல்கிறார் இ.பி.எஸ்.,

வெளியில் எதிர்ப்பு; உள்ளே ஆதரவு; தி.மு.க.,-பா.ஜ.,வை சொல்கிறார் இ.பி.எஸ்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேலம்: 'மத்திய அரசின் தயவை எதிர்பார்த்து பாஜ.,வை அழைத்து நாணய வெளியீட்டு விழாவை தி.மு.க., நடத்தியது. தி.மு.க., பா.ஜ.,வும் வெளியில் எதிர்ப்பது போல் இருந்தாலும் உள்ளே கூட்டணி வைத்துள்ளனர்' என, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., குற்றம் சாட்டியுள்ளார்.சேலம் ஓமலூரில் நிருபர்கள் சந்திப்பில், இ.பி.எஸ்., கூறியதாவது: தி.மு.க., அரசை குற்றம் சாட்டினால், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை என்னை குறை சொல்கிறார். அண்ணாமலை பிறப்பதற்கு முன்பே, தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஆட்சி அமைத்துள்ளார். மத்திய அரசு நாணயம் வெளியிட்டால் தான், புகழ் கிடைக்கும் என்பது போல அண்ணாமலை பேசுகிறார். அவர் எம்.ஜி.ஆரின் வரலாறு தெரியாமல் அவரை சிறுமைப்படுத்தி பேசுகிறார். பொய்களை மட்டுமே பேசுபவர் தான் தமிழக பா.ஜ., தலைவராக உள்ளார்.

இரட்டை வேடம்

மத்திய அரசின் தயவை எதிர்பார்த்து, பாஜ.,வை அழைத்து நாணய வெளியீட்டு விழாவை தி.மு.க., நடத்தியது. தி.மு.க., பா.ஜ.,வும் வெளியில் எதிர்ப்பது போல் இருந்தாலும் உள்ளே கூட்டணி வைத்துள்ளனர். தி.மு.க.,வைப் போல, பா.ஜ.,வும் இரட்டை வேடம் போடுகிறது. இண்டியா கூட்டணி கட்சித் தலைவர்களை தி.மு.க., ஏன் நாணயம் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை. கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா அழைப்பிதழ் எனக்கு வந்தது. அழைப்பிதழில் தமிழக அரசின் சின்னம் தான் இருந்தது.

திட்டங்கள்

மாநில அரசின் செயலாளர் பெயர் தான் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் மத்திய அரசு நடத்தியதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். அ.தி.மு.க., ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ., ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை. கடன் சுமை தான் அதிகரித்துள்ளது. மத்தியில் ரூ.55 லட்சம் கோடியாக இருந்த கடன், பத்து ஆண்டுகளில் ரூ.165 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

பேசும் தமிழன்
ஆக 26, 2024 08:05

யாரு... பத்து தோல்வி பழனிசாமியா.... அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் உள்ளது..... நீங்கள் உளறி கொட்டுவது.


Kadaparai Mani
ஆக 25, 2024 18:27

ரத்தினம் சார் மிக சிறந்த கருத்து .


M Ramachandran
ஆக 25, 2024 15:41

ஐயோ பாவம் பழனிச்சாமி இப்படி புலம்ப வைத்து விட்டார்களெ. பறவைய்யகள் பழமிருக்கும் மரத்திற்கு ஒடி விட்டன


M Ramachandran
ஆக 25, 2024 15:38

மக்களை நம்ப வைக்க முயற்சிக்கணும். இறஙகி மக்களிடம் போக வேண்டும் சும்மா உஉஉடகானகளுக்கு பேத்திய கொடுத்தால் மட்டும் போதாது


M Ramachandran
ஆக 25, 2024 15:35

பழனி காலி பெருங்காயா டாப்பா


Vijay D Ratnam
ஆக 25, 2024 15:17

2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மரணமடைந்த போது வெங்கய்யா நாயுடு வந்து உட்கார்ந்துகொண்டு ஆரம்பித்த பாஜகவின் பிராஜெக்ட் எதிரி திமுகவை காலி பண்ணவேண்டும் என்பதல்ல. நண்பன் அதிமுகவை கூட இருந்தே காலி பண்ண வேண்டும் என்பதுதான். அதிமுகவை கைப்பற்ற நினைத்த சசிகலாவை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு, தங்களின் ஆள் ஓபிஎஸ்ஸை வைத்துகொண்டு இபிஎஸுடன் மோதவிட்டு அதிமுகவை முழுசாக கைப்பற்றிவிடவேண்டும் என்பதுதான். ஆனால் எடப்பாடி பழனிசாமி சரியான நேரத்தில் மிகச்சரியாக எடுத்த இரண்டு முடிவுகளால் பாஜக மீண்டும் தலைதூக்க முடியாதபடிக்கு பாஜகவின் தமிழக கனவில் மண் அள்ளிப்போட்டு விட்டார். முதலாவது சரியான நேரத்தில் கட்சிக்குள்ளேயே இருந்துகொண்டு குழிபறித்துக்கொண்டு இருந்த கருப்பு ஆடு பன்னீர்செல்வத்தை துரோகி முத்திரை குத்தி கட்சியை விட்டு வெளியேற்றியது. இரண்டாவது என்றால் காலை சுற்றிய பாம்பு போல இருந்த பாஜக கூட்டணியை கழட்டி கடாசியது. அண்ணாமலை ரசிகர் மன்றத்துக்கு அதாவது தமிழக பாஜகவுக்கு இனி இறங்குமுகம்தான். வரும் சட்டமன்ற தேர்தலில் அகெய்ன் நோட்டாவோடதான் போட்டி. குடுகுடுப்பைக்காரன் மாதிரி 400 இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி உறுதி, தமிழகத்துக்கு மூன்று மத்திய மந்திரி உறுதி என்று ஒரு வருசமா கதறிக்கொண்டிருந்ததை நம்பி ஒரு பகுதி தமிழக வாக்காளர்கள் வாக்களித்தார்கள். எம்.பி தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிப்பதால் ஒரு பயனும் இல்லை என்றும் ஒரு பகுதி வாக்களித்தார்கள். அப்படியும் பருப்பு வேகல. முடிவு எதிரிக்கு சாதகமானது. ஆனால் 2026 சட்டமன்ற தேர்தல் அப்படி இல்லை. அங்கு போட்டி என்பதே அதிமுக vs திமுகதான். நாம் தமிழர், விஜய் கட்சி அடுத்து ஐந்தாவது இடம்தான் பாஜக. வரும் தேர்தலில் நான்கு ஆண்டு கால எடப்பாடி பழனிசாமி ஆட்சி மற்றும் ஐந்து ஆண்டுகால மு.க.ஸ்டாலினின் தற்போதைய ஆட்சி என்ற ப்ராக்ரஸ் ரிப்போர்ட் தமிழக வாக்காளர் கையில் இருக்கும். நமீதா சொல்வது போல டமில்நாட்ல தாமரை மல்லாந்தே தீரும்.


Venkatesh
ஆக 25, 2024 17:01

யப்பா மூச்சை பிடிச்சு கதறுறானே... உன்னை போன்ற கூட்டம் இருப்பதால் தான் தாமரை மலர்வது தாமதமாகிறது... ஆனால் மலரந்தே தீரும்....


பேசும் தமிழன்
ஆக 25, 2024 17:26

தண்ணிய குடி...... தண்ணிய குடி.... தண்ணிய குடி


மோகனசுந்தரம்
ஆக 25, 2024 14:55

உன்னால் ஒரு ஆணியும் புடுங்க முடியவில்லை. நீ மற்றவர்களை குறை சொல்ல வந்து விட்டாய்.


ஆரூர் ரங்
ஆக 25, 2024 14:36

போலி என்சிசி முகாம் மூலம் சிறுமிகளுக்கு நடந்த கொடுமையை எதிர்த்து போராட்டம் நடத்த நீங்க தயாராக இல்லை. எந்த பலமுள்ள எதிர்கட்சியும் உங்களைப் போல சும்மா இருக்காது. ஏனெனில் அது பங்காளிகள் உறவுக்கு ஆபத்து.


Kadaparai Mani
ஆக 25, 2024 18:29

நேற்று மதுரை இல் நடந்த மாபெரும் அதிமுக போராட்டம் நீங்கள் தொலைக்காட்சி இல் பார்க்க வில்லையா .


ஆரூர் ரங்
ஆக 25, 2024 14:30

பங்காளிக்காக அவ்வப்போது நாடகமாடி வருவது யாருக்குத் தெரியாது?.


Kadaparai Mani
ஆக 25, 2024 18:31

உன்மையை போராட்டம் ஆருத்திரா மற்றும் மயிலாப்பூர் fund வழக்கை cbcid விசாரிக்க அதிமுக போராட்டம் அறிவிக்க வேண்டும் .


Almighty
ஆக 25, 2024 14:19

தலையில் இல்லாத கீரீடதை இருப்பதாக நினைப்பதை, யாராவது உண்மை நிலவரத்தை எடுத்து சொல்லி புரிய வைத்து கட்சியை காப்பாற்றும் வழியை பார்க்க சொல்லுங்க. எவ்வளவு அடி வாங்கினாலும் பய புல்லைக்கு தலைகணம் போக மாட்டிங்குது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை