உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உரிமைகள் முக்கியம் அதற்காக நாகரிகம் தவறி பேசக்கூடாது

உரிமைகள் முக்கியம் அதற்காக நாகரிகம் தவறி பேசக்கூடாது

அமலாக்கத் துறை போன்ற புலனாய்வு நிறுவனங்களை, தன் அரசியல் நடவடிக்கைகளுக்காக, பா.ஜ., அரசு வெளிப்படையாக பயன்படுத்துகிறது. தனக்கு வேண்டாதவர்களை அச்சுறுத்தும் வகையில், அமலாக்க துறையும் நடந்து கொள்கிறது. அது சுதந்திரமாக இயங்க வேண்டும். தனியார் நிறுவனங்கள், தனி நபர்கள் என பலரையும் விசாரணை வலையங்களுக்குள் கொண்டு வந்து, மறைமுக நெருக்கடி கொடுப்பதை பா.ஜ., அரசு நிறுத்த வேண்டும். கூட்டணியில் எங்கள் நிலைப்பாடு குறித்து ஏற்கனவே சொல்லி விட்டோம். கோவையில் வி.சி., பிரமுகர் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து விசாரித்தேன். வாக்குவாதம் மட்டுமே ஏற்பட்டுள்ளது; அவர் தவறாக எதுவும் பேசவில்லை. பெண் அதிகாரி என்பதால், புகார் கொடுத்து அழுத்தம் கொடுக்கவே கைது செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட வி.சி., பிரமுகர் எதுவும் தவறாக பேசியிருந்தால் கண்டிக்கத்தக்கதுதான். என்னதான் உரிமைகள் முக்கியம் என்றாலும், யாரும் நாகரிகம் தவறி பேசுவதோ, செயல்படுவதோ கூடாது. திருமாவளவன், தலைவர், வி.சி.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை