உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தலைவர்கள் பெயரில் நடத்தப்படும் கலவரத்தை நியாயப்படுத்த முடியாது: ஐகோர்ட் உத்தரவு

தலைவர்கள் பெயரில் நடத்தப்படும் கலவரத்தை நியாயப்படுத்த முடியாது: ஐகோர்ட் உத்தரவு

மதுரை: 'ஒரு தலைவரின் உண்மையான தொலைநோக்கு பார்வை அல்லது சித்தாந்தத்தை பொருட்படுத்தாமல், அவரது பெயரில் நடத்தப்படும் எந்தவொரு கலவரம் அல்லது வன்முறை செயலை நியாயப்படுத்த முடியாது' என, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. கேரளாவை சேர்ந்த விவசாயி அபுபக்கர், 50. இவர், 2012 அக்., 30ல் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கமுதியில் நடந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியின் போது மூவர் கொல்லப்பட்டது தொடர்பாக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கீழக்கரை ரோடு ஆர்.எஸ்.மடை அருகே சிலர் கார் மீது கற்களை வீசினர். அது அபுபக்கரின் நெற்றி, வலது கண்ணில் தாக்கியது. காயமடைந்த அவர் இறந்தார். ராமநாதபுரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்தனர். ராமநாதபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. 'ஒரு செயல் மரணத்தை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிந்தே செய்தல்; ஆனால் மரணத்தை ஏற்படுத்தும் எண்ணம் இல்லாதது' சட்டப்பிரிவின் கீழ் ஆர்.எஸ்.மடை முத்துகாளீஸ்வரன் என்பவருக்கு, 2022ல் ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஆர்.பூர்ணிமா அமர்வு பிறப்பித்த உத்தரவு: கார் மீது மனுதாரர் கற்களை வீசினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. சந்தேகத்திற்கிடமின்றி குற்றச்சாட்டை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது. கீழமை நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. கேரளாவிலிருந்து ஏர்வாடி தர்காவில் வழிபட வந்த அப்பாவி அபுபக்கர் இறந்தார். அவரது சட்டப்பூர்வ வாரிசுகளின் துயர நிலையை கருத்தில் கொண்டு, போதிய இழப்பீடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்க ராமநாதபுரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு கலெக்டருக்கு பரிந்துரைக்க வேண்டும். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இன்று உயிருடன் இருந்திருந்தால், இந்த குரூரமான செயலை கடுமையாக கண்டித்திருப்பார். ஏனெனில், அவரது கருத்துப்படி 'விவேகமற்ற வீரம் முரட்டுத்தனமாகும்' என்பவதாகும். ஒரு தலைவரின் உண்மையான தொலைநோக்கு பார்வை அல்லது சித்தாந்தத்தை பொருட்படுத்தாமல், அவரது பெயரில் நடத்தப்படும் எந்தவொரு கலவரம் அல்லது வன்முறை செயலை நியாயப்படுத்த முடியாது. அவ்வாறு செய்வது அத்தலைவரின் மரியாதை, அவர் வலியுறுத்திய அடிப்படை கொள்கைகளை அவமதிப்பதற்கு சமமானது என்பதை சுட்டிக்காட்டுவது மிகையாகாது. இவ்வாறு உத்தர விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

பேசும் தமிழன்
நவ 12, 2025 12:48

அப்போ மதத்தின் பெயரால் கலவரம் நடத்தினால் சரியா... அனை‌த்து கலவரங்களும் தவறு என்று சொல்ல வேண்டும்.


V Venkatachalam, Chennai-87
நவ 12, 2025 09:48

நீதியரசர்களின் ஒரே தாரக மந்திரம் சந்தேகத்தின் பலனை குற்றவாளிக்கு வழங்கணும். நீதி பரிபாலனம் அதை தான் தூக்கி பிடிக்குது திருட்டு தீயமுகவின் தாரக மந்திரம் இந்த சந்தேகம் என்கிறதை அப்படியே விடாப்பிடியாக பிடித்து தொங்கி புரட்டி புரட்டி பேசும் வக்கீல்களை வைத்து நீதி அரசர்களை குழப்பி சந்தேகத்தை திணித்து சந்தேகத்தின் பலனை தங்களுக்கு சாதகமாக்கி தீர்ப்பு வாங்கிடறதுதான். இது தான் நீதியரசர்களை விமர்சிக்க காரணமாகி விமர்சிக்கும் போக்கு அதிகரிக்கிறது. சமூக பொறுப்புடன் வாதிடும் வக்கீல்கள் தேட வேண்டிய நிலையில் இருக்கிறோம். திருட்டு தீயமுக வை வேரோடு பிடுங்கி எறிந்தால் தான் அபத்தமான தீர்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.


Ram
நவ 12, 2025 08:40

முதலில் இந்தியாவில் எல்லா தலைவர்களின் சிலைகளை அகற்றவேண்டும் , தலைவர்களை கொண்டாடும் நிகழ்ச்சிகளுக்கு நூறு பெருக்குமேல் அனுமதி கொடுக்கக்கூடாது


V.Mohan
நவ 12, 2025 07:57

கல்லால் அடிப்பவர்கள்,இனிமேல் சொல்லீவிட்டு அடித்தால் மட்டுமே ""சந்தேகத்திற்கு இடமின்றி"" போலீஸால் நிரூபிக்க முடியும் போல. அடடே என்ன ஒரு தீர்ப்ப?


Krishna
நவ 12, 2025 07:53

If he is Innocent, Who Killed him& Why Courts are Not Punishing Real Murderers or Police/Courts????


duruvasar
நவ 12, 2025 07:40

அபூபக்கர் தன்னை தானே கல்லால் அடித்துக்கொண்டு இறந்து போயிருப்பது வருத்தத்திற்கு உரியது.


பேசும் தமிழன்
நவ 12, 2025 07:14

தர்கா வழிப்பாடு என்பதே அவர்கள் மதத்தில் இல்லாத ஒன்று ....அப்படியிருக்க வழிபட சென்றார் என்று எப்படி கூறுகிறீர்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை