உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொது பணியிட மாறுதல் முறை: சாலை பொறியாளர்கள் கோரிக்கை

பொது பணியிட மாறுதல் முறை: சாலை பொறியாளர்கள் கோரிக்கை

சென்னை: 'நெடுஞ்சாலை துறையில், எட்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொது பணியிட மாறுதலை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்' என, தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை பட்டய பொறியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை பட்டய பொறியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலர் மாரிமுத்து வெளியிட்டுள்ள அறிக்கை : பொதுவாக அரசு துறையில், 'ஏ' மற்றும் 'பி' போன்ற உயர் நிலையில் உள்ள அலுவலர்கள் மூன்று ஆண்டுகள் மட்டுமே, ஒரு இடத்தில் பணியாற்ற வேண்டும். இதற்காக ஆண்டுதோறும் பொது பணியிட மாறு தல் வழங்கப்பட வேண்டும். நெடுஞ்சாலை துறையில், 2018ல் கடைசியாக பொறியாளர்களுக்கு பொது பணியிட மாறுதல் வழங்கப்பட்டது. அதன்பின், கொரோனா தொற்று காலத்தில் இரண்டு ஆண்டுகள் பணியிட மாறுதல் வழங்கப்படவில்லை. கடந்த, 2021ம் ஆண்டு உதவி கோட்ட பொறியாளர், உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கி இருக்க வேண்டும்; ஆனால், வழங்கவில்லை. எனவே, துறையில் மீண்டும் பொது பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ