உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கனமழை வெள்ளம் காரணமாக மூழ்கிய சாலைகள்

கனமழை வெள்ளம் காரணமாக மூழ்கிய சாலைகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கனமழை காரணமாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் சாலைகள் வெள்ள நீரில் மூழ்கினசாலையைவிட தாழ்வாக உள்ளதால், தி.நகர் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் மழைநீர் தேங்கி, குளம்போல் மாறியது.கே.கே., நகரில் ராஜமன்னார் சாலை, ஆர்.கே., சண்முகம் சாலை, காமராஜர் சாலை; விருகம்பாக்கம், கோடம்பாக்கம், மேற்கு மாம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளை மூழ்கடித்து மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது.கோயம்பேடு சந்தையிலும், மழைநீர் தேங்கியதால், வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் அவதிப்பட்டனர். அரும்பாக்கம், தேனாம்பேட்டை கே.பி.தாசன், தி.நகர், அசோக் நகர், கொரட்டூர், புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில், குடியிருப்புகளிலும் மழைநீர் புகுந்தது.பட்டாபிராம், தண்டுரை, ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகள், கவரப்பாளையம் சாலைகளில் முழங்கால் மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.நீலாங்கரை, பாலவாக்கம், கொட்டிவாக்கம், பாண்டியன் சாலை மற்றும் கபாலீஸ்வரர் நகரில் ஆக்கிரமிப்பு அகற்றிய இடத்தில், சாலை பள்ளமாக உள்ளது. அதில் வெள்ளம் தேங்கியதால், இ.சி.ஆரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் மழைநீர் சூழ்ந்ததால், வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை உருவானது. மழைநீர் தேக்கத்தால், கனரக வாகன போக்குவரத்து மிகுந்த மாதவரம் ரவுண்டானா அருகே, இருபுறமும் வாகனங்கள் தத்தளித்து ஊர்ந்து சென்றன.போரூர் - ஆற்காடு சாலை பரங்கிமலை - பூந்தமல்லி, செங்குன்றம் - திருவள்ளூர் கூட்டுச்சாலை சந்திப்பு, காவாங்கரை பகுதியில் ஜி.என்.டி., சாலையில் மழைநீர் தேங்கி நின்றது. இங்கு, மழைநீர் கால்வாய் புதிதாக கட்டப்பட்ட நிலையில், தண்ணீர் அதிகளவு தேங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

sankar
டிச 01, 2024 10:47

போர் தௌசண்டு என்னாச்சு


இறைவி
டிச 01, 2024 06:08

1 / 1 அதிக கன மழையோ ஒரு மணி நேரத்தில் 20 செமீக்கும் அதிகமாகவோ சென்னையில் மழை கொட்டி விடவில்லை. நிதானமாகவே பெய்துள்ளது. ஆனாலும் பெரும்பாலான சாலைகள், தரைவழி பாலங்கள் எல்லாம் மழை நேரில் முழுகி உள்ளன. அப்படியானால் 4000 கோடி ரூபாயில் வடிகால் வசதிகள் செய்யப்பட்டது எல்லாம் பொய்யா கோபால். இதுதான் யாரும் குறையே சொல்ல முடியாத திராவிட மாடல் ஆட்சி. காசுக்கும் குவாட்டருக்கும் வெட்கமில்லாமல் ஓட்டு போடும் மக்கள் இருக்கும் வரையிலும், ஓட்டு சதவிகிதத்தை அதிகரிக்க ஆமாம் சாமி போடும் கட்சிகளை வளைத்து வைத்து இருக்கும் வரையிலும் தீயமுகதான் திரும்ப திரும்ப ஆட்சிக்கு வரும். மக்கள் எப்போதும் போல சகதியில் உழலும் ஜீவன்களாக சந்தோஷத்தை அனுபவிப்போம். இதுவரை கட்சி சார்பாக காசு கொடுத்தது போக இப்போது அரசு செலவிலேயே மகளிர் உரிமைதொகை என்ற பெயரில் மாதாந்திர காசு கொடுக்கிறார்கள். மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு வரி, மின்சார உயர்வு மூலம் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் நம்மிடம் பிடுங்குகிறார்கள். நாமும் பல்லிளித்து ஓட்டு போடுவோம்.


Kalyanaraman
டிச 01, 2024 10:01

நமது வரிப்பணம் தான் - மகளிர் உரிமைத் தொகை - அரசு செலவில் இல்லை.


நிக்கோல்தாம்சன்
டிச 01, 2024 13:24

உங்க பெயரை சொல்லி வெளியாரிடத்தில் வாங்கிய கடன்கள் தான் இன்று முழுகியது , நீங்கதான் அந்த கடனை கட்டவேண்டும்


Rajakumar Ramasamy
டிச 01, 2024 04:38

4000 கோடி காலியா?


சமீபத்திய செய்தி