உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொலை வழக்கில் தேடப்பட்ட ரவுடி சென்னையில் சுட்டுப்பிடிப்பு

கொலை வழக்கில் தேடப்பட்ட ரவுடி சென்னையில் சுட்டுப்பிடிப்பு

சென்னை: சென்னை மயிலாப்பூரில் ரவுடி மவுலி (25) கொலை செய்யப்பட்ட வழக்கில், தேடப்பட்ட மற்றொரு ரவுடி விஜயகுமார் காலில் போலீசார் சுட்டுப்பிடித்தனர்.சென்னை மயிலாப்பூரில் ரவுடி மவுலி (25) கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே பதுங்கி இருந்த ரவுடி விஜயகுமாரை,23, போலீசார் கைது செய்ய முயற்சி செய்தனர். அப்போது ரவுடி விஜயகுமார் கத்தியால் தாக்கியதில் போலீஸ்காரர் தமிழரசனுக்கு இடது கையில் வெட்டு காயம் ஏற்பட்டது.இதையடுத்து விஜயகுமாரை போலீசார் காலில் சுட்டுப்பிடித்தனர். தற்போது சிகிச்சைக்காக ரவுடி விஜயகுமார், போலீஸ்காரர் தமிழரசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி விஜயகுமார் மீது 2 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த கொலை வழக்கில் மேலும் கவுதம், நிரஞ்சன் ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
நவ 22, 2025 08:39

சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி விஜயகுமார் மீது 2 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஆனால் ஒரு வழக்கும் முடிவுக்கு வராது. தண்டனையும் கிடைக்காது. நீதிபதியை கேட்டால், போதிய சாட்சியங்கள் இல்லை என்று கூறுவார். ஆனால் வழக்குகள் மட்டும் கூடிக்கொண்டே போகும். இது யாரை ஏமாற்றும் வேலை?


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை