உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கு: போலீசாருக்கு ரூ.1 அபராதம் விதித்தது மனித உரிமை ஆணையம்

அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கு: போலீசாருக்கு ரூ.1 அபராதம் விதித்தது மனித உரிமை ஆணையம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., ஆகியோர் தலா ரூ.1 இழப்பீடு வழங்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.2019ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி அறப்போர் இயக்க தன்னார்வலர்கள் 11 பேர் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் வகையில் ஆய்வு மேற்கொள்ள சென்றனர். அதற்காக சென்னை தரமணியில் உள்ள கல்லுக்குட்டை என்ற இடத்தை பார்வையிட சென்றனர். ஆனால் போலீசார் அவர்களை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். அறப்போர் இயக்கம் மீது வழக்கும் தொடரப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pf2kkegv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதைத் தொடர்ந்து, சென்னை தரமணி போலீஸ் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து தன்னார்வலர்களுக்கு இழப்பீடாக தலா ரூ.1 வழங்க வேண்டும் என்று அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் மனித உரிமை மீறல் புகார் அளித்திருந்தார்.இந்த வழக்கின் விசாரணை முடிந்து தற்போது தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. அதில் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் கவிதா என 2 பேரும் 11 தன்னார்வலர்களுக்கு மொத்தம் ரூ.22 வழங்க வேண்டும் என்று மாநில மனித உரிமைகள் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது. இந்த விவரத்தை அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன் தமது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 29, 2025 20:51

மனித உரிமை ஆணையம் சிறிது மென்மை தன்மையை கடைபிடித்து இருக்கலாம். இவ்வளவு பெரிய தண்டனை கொடுத்தால் எப்படி. தமிழக அரசு தான் முதலில் எப்படி இந்த 22 ரூபாய் கட்டும் இவ்வளவு பெரிய தொகைக்கு எங்கு போகும். அப்படியே கட்டி விட்டு இந்த காவலர்கள் மாத சம்பளத்தில் பிடித்தால் அவர்கள் வாழ்வாதாரம் என்ன ஆகும். குழந்தைகள் படிப்பு என்ன ஆகும். மனித உரிமை ஆணையமே சிறிது மனமிரங்குகள். நிற்க. இந்த நக்கல் இந்த அறப்போர் இயக்கத்திற்கு தேவை தான். கண்டிப்பாக இந்த கேவலத்துக்கு இவர்கள் உரியவர்கள். 2021 சட்ட சபை தேர்தல் நேரத்தில் இவர்கள் அதிமுக அரசுக்கு எதிராக திமுகவோடு கைகோர்த்து வேண்டும் என்றே மிகைப் படுத்தி பல செய்திகள் வெளியிட்டனர். அதனாலேயே திமுக வெற்றிக்கும் மறைமுகமாக உதவினர். ஆனால் இவர்கள் அதிமுக அரசுக்கு எதிராக கூறிய புகார்கள் அனைத்தும் திமுக ஆட்சி காலத்தில் பன்மடங்காக வளர்ந்து உள்ளது. திமுக ஜெயிக்க மறைமுகமாக உதவிய இவர்களுக்கு இந்த முக்குடைப்பு கட்டாயம் தேவை. இருந்தாலும் மனித உரிமை ஆணையம் இந்த அளவுக்கு நக்கல் செய்ய வேண்டியதில்லை.


Mecca Shivan
ஏப் 29, 2025 20:40

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட கணங்களுக்கு 1 கோடி அபராதம் விதிக்கலாம் .. இந்த அறப்போர் ஜெயராமன் சவுக்கு ஷங்கர் மற்றும் நக்கீரன் கோபாலை போல மிரட்டி சம்பாதிப்பவன் .. பணம் வரவில்லை என்றால் மீடியாவில் பேட்டி கொடுப்பான் ..வந்துவிட்டால் அடுத்த வேலை வரும்வரை காணாமல் போய்விடுவான்


பா மாதவன்
ஏப் 29, 2025 17:42

என்னங்க... இவ்வளவு பெரிய தண்டனையா.....


Padmasridharan
ஏப் 29, 2025 17:33

இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., ஆகியோர் தலா ரூ.1 இழப்பீடு.. பெரிய கணக்கில் லஞ்சம் வாங்கினால் அவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்படுகிறது. இது வெறும் 22௹ தானே என்று இந்த காவலர்களின் பெயர்களோடு, புகைப்படங்கள் வெளியிடப்படவில்லையா.


Shekar
ஏப் 29, 2025 15:22

இவ்வளவு பெரிய தண்டனை கொடுத்தவர் போன பிறவியிலே எந்த கோவில் வாசல்ல உட்கார்ந்திருந்தாரோ


GMM
ஏப் 29, 2025 14:57

அறப்போர் இயக்கம் வழக்கு சட்ட மீறல். போலீஸ் தன் கடமையை செய்து உள்ளது. குழுவாக பார்வையிட துறை அதிகாரி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் முன் அனுமதி பெற வேண்டும். 1 ரூபாய் அபராதம் என்றாலும் ஆணையம் முடிவு தவறு. இயக்கத்தினர் சிறை படுத்த வேண்டும். நிதி முடக்க வேண்டும்.


Shankar
ஏப் 29, 2025 14:50

தமிழகத்தில் என்னதான் நடந்துகொண்டிருக்கிறது? பொலிஸாருக்கு அபராதம். அதுவும் 1 ரூபாய். அதுவும் இந்த தீர்ப்பை சொல்லை 5 வருஷம். மனித உரிமை ஆணையம் ரொம்ப நல்லா செயல்பட்டுக்கிட்டு இருக்கு.


சமீபத்திய செய்தி