உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டநெரிசலில் பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு; ஒருநபர் விசாரணை ஆணையம் அமைப்பு

கூட்டநெரிசலில் பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு; ஒருநபர் விசாரணை ஆணையம் அமைப்பு

சென்னை: கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை; இன்று (செப்.,27) கரூரில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 10குழந்தைகள் 16 பெண்கள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் அறிந்து சொல்லொண்ணாத் துயரமும் வேதனையும் அடைந்தேன்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=e0jgrbmu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விலைமதிக்க முடியாத அந்த உயிரிழப்புகள் நம் அனைவரின் நெஞ்சத்தையும் உலுக்கியுள்ளது. ஈடு செய்ய முடியாத பேரிழப்பை எதிர்கொண்டுள்ள அந்தக் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த வருத்தத்தையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.மருத்துவ சிகிச்சைக்கான சிறப்பு ஏற்பாடுகளை துரிதப்படுத்த அமைச்சர்கள் மகேஷ், மா.சுப்பிரமணியன் ஆகியோரை அனுப்பி வைத்துள்ளேன். மேலும், திருச்சி, சேலம் மற்றும் திண்டுக்கல் கலெக்டர்கள், மருத்துவக் குழுக்களுடன் கரூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த துயரகரமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தலா ஒரூ.1 லட்சம் ரூபாயும் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.மேலும் இச்சம்பவம் குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் உடனடியாக அமைக்கப்படும். நான் இன்றிரவே கரூர் சென்று மேற்படி துயர சம்பவத்தில் உயிரழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து, ஆறுதல் தெரிவிக்கவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்கவும் உள்ளேன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Durai Kuppusami
செப் 28, 2025 11:27

தினமலருக்கு நன்றி


Durai Kuppusami
செப் 28, 2025 11:24

அரசு பணத்தை எடுத்து தாராளமா எடுத்து கொடுக்கிறீங்க இது அரசு விழாவா தனிப்பட்ட ஒரு கட்சி நடத்திய கூட்டம் எல்லோரும் வருக என்று அரசா சொன்னது மக்களின் வரிப்பணம் தேவையில்லாமல் வீணாக்கும் படுகிறது யார் நடத்தினார்களோ அவர்கள் நமக்கு அப்பா இருக்கிறார் என்று வண்டி ஏறி வீட்டில் உறக்கத்தில் இருக்கிறார் அவரை நம்பி வந்த மட்டி ரசிகர்கள் வீட்டில் எழவு... இதெல்லாம் யார் கேட்பது.... இதேதான் கள்ளக்குறிச்சி சம்பவம் அரசு மதுவா குடித்தான் யாரோ கள்ள சாராயம் விற்றான் குடித்தான் செத்தான் அதற்கு அரசு பணம் காலி...இதுவும் அதுதானே அரசா இவர்களை வரச்சொன்னது இதற்கு அரசு பணம் எதற்கு உரியவை 10 அல்லது 30 லட்சம் கொடுக்கட்டுமே தினம் தினம் அரசு பஸ் மோதி தாய் தந்தை குழந்தை என்று எத்தனை பேருக்கு இம்மாதிரி உதவி தொகை போனது கேட்பார் யாரும் இல்லை இதுதான் உண்மை....


Kumar Kumzi
செப் 28, 2025 11:18

கரூர் சூத்திரதாரியே நீ தானே


Mariadoss E
செப் 28, 2025 10:50

திமுக அரசு உடனே செய்ய வேண்டியது இந்த பரப்புரைகளை தடை செய்து சட்டம் இயற்ற வேண்டும். வேண்டுமென்றால் எங்கயாவது மைதானத்தில் எலெக்ஷன் கூட்டம் நடத்திக் கொள்ளட்டும். அது என்ன நாடு ரோட்டில் மக்களுக்கு சிரமம் கொடுத்து, உயிர்ப்பலி வாங்கி பரப்புரை? யாருக்கு வேண்டும்?


கல்யாணராமன்
செப் 28, 2025 10:42

சந்துரு மற்றும் அருணா ஜெகதீசன் ஆகியோர் நிரந்தர விசாரணை அதிகாரிகள்.


Venkateswaran Rajaram
செப் 28, 2025 10:09

திராவிட மாடல் ஆட்சியில் மக்களின் முட்டாதனத்திற்கு கிடைத்த தண்டனை இது. இது பத்து ரூபா ஆலினால் திட்டமிடப்பட்டு செய்த சதி போல் தெரிகிறது


sundar
செப் 28, 2025 09:46

ரோட்டைப் பார்த்தால் குறுகலாக உள்ளது. இங்கு தான் பெர்மிஷன் குடுத்தார் களா தெரியவில்லை? வேறு பெரிய மைதானம், வெட்ட வெளி பெரிய இடங்கள் எதுவுமே ஊருக்குள்ளே அல்லது வெளியே இல்லையா? கு‌ம்ப‌ல் சேர்ந்தால் கட்டுப்பாட்டில் வைப்பது கஷ்டம். அப்படித் தலைவர் யாருமே நாட்டில் கிடையாது.


ராமகிருஷ்ணன்
செப் 28, 2025 09:34

ஒரு நபர் கமிஷன், அதாவது திமுக நீதிபதி திமுகவுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்குவார். அதனால ஓட்டு ஆதாயம் வருமாறு செய்யப்படும்


Kasimani Baskaran
செப் 28, 2025 09:29

முதல்வருக்கு தெரிந்த ஒரு நபர் விசாரணை என்பது கண்துடைப்பு நாடகம். நீதிமன்றமே முன்வந்து விசாரிக்க வேண்டும். கூட்டத்துக்கு அனுமதி மறுத்ததில் இருந்து விசாரணையை ஆரம்பிக்க வேண்டும். முறைகேடு செய்து ஜாமீனில் இருக்கும் ஒரு குற்றவாளியை முன்னிறுத்தி ஆறுதல் சொல்வது வெட்கப்படவேண்டிய செயல்.


Suresh
செப் 28, 2025 09:27

அரசாங்கமே முழு பொறுப்பு, பயனற்ற அரசாங்க தோல்வி, தங்கள் அன்பானவர்களை இழந்த குடும்பத்தினர் அனைவருக்கும் வருந்துகிறேன்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை