ரூ.103 கோடி சொத்து பறிமுதல்
சென்னை: சட்ட விரோத பணப் பறிமாற்றம் தொடர்பாக, கேரளா மற்றும் தமிழகத்தில், தொழில் அதிபர் பிரேம்குமார், 58 என்பவருக்கு சொந்தமான, வீடு, அலுவலகம் உட்பட, 12 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள், சில தினங்களுக்கு முன் சோதனை நடத்தினர். இச்சோதனையில், 103 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை பறிமுதல் செய்து இருப்பதாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (நவ.,10) அறிவித்துள்ளனர்.