மேலும் செய்திகள்
பாலுக்கான ஊக்கத்தொகை; உண்ணாவிரதம் இருக்க முடிவு
14-Mar-2025
தமிழகத்தில், 20 லட்சம் பேர் ஆவின் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களில், 8 லட்சம் விவசாயிகள் ஆவின் நிறுவனத்திற்கு பால் விநியோகிக்கின்றனர். தினமும் 2 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், 35 லட்சம் லிட்டர் பாலை ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கிறது. ஆவின் நிறுவனம் பால் விநியோகிக்கும் விவசாயிகளின் நலனை காப்பதற்காக அறிவிக்கப்பட்ட, லிட்டருக்கு, 3 ரூபாய் ஊக்கத்தொகையை, காலத்தே வழங்க வேண்டும். அதை நான்கு மாதங்களாக வழங்காததால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அவர்களுக்கு வழங்க வேண்டிய, 120 கோடி ரூபாய்க்கும் அதிகமான, ஊக்கத் தொகையை உடனே வழங்க வேண்டும்.வாசன், தலைவர், த.மா.க.,
14-Mar-2025