உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெல் எடுத்து செல்வதில் ரூ.160 கோடி ஊழல்: பா.ஜ.,

நெல் எடுத்து செல்வதில் ரூ.160 கோடி ஊழல்: பா.ஜ.,

சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கை: தி.மு.க., அரசின் ஊழல், தினமும் தொடர்கிறது. தற்போது நுகர்பொருள் வாணிப கழகம் வாயிலாக, கொள்முதல் செய்யப்படும் நெல்லை, கிடங்குகளுக்கு எடுத்து செல்லும், போக்குவரத்து ஒப்பந்தத்தில், 160 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது. ஏற்கனவே, விளைவித்த நெல்லை, முறையாக கொள்முதல் செய்யாததால், விவசாயி களும்; கொள்முதல் செய்த நெல்லை எடுத்து செல்லும் லாரிகளுக்கான வாடகையை சரி வர தராததால், லாரி உரிமையாளர்களும் அவதியடைந்து உள்ளனர். ஆனால், தி.மு.க., அரசோ, ஒரு டன்னுக்கு, 412 ரூபாய் வீதம், லாரி ஒப்பந்தத்தில் 160 கோடி ரூபாய் மோசடி செய்து, கல்லா கட்டுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
நவ 01, 2025 07:09

ஊழலை எதில் எதில் எப்படி எப்படி எல்லாம் செய்யலாம். வாங்க கற்றுக்கொள்ளுங்கள் திமுக அரசிடம்.