உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.2 லட்சம் லஞ்சம்: திருச்சியில் தாசில்தார் கைது: சென்னையில் பெண் விஏஓ சிக்கினார்

ரூ.2 லட்சம் லஞ்சம்: திருச்சியில் தாசில்தார் கைது: சென்னையில் பெண் விஏஓ சிக்கினார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி : திருச்சி மாநகராட்சி பெயருக்கு மாற்றம் செய்யப்பட்ட இடத்தை, மீண்டும் தங்களின் பெயருக்கு மாற்றம் செய்ய விண்ணப்பித்தவரிடம், 2 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஆர்.டி.ஓ., பி.ஏ.,வான தாசில்தார் கைது செய்யப்பட்டார். தஞ்சையை சேர்ந்தவர் கோபி. இவருக்கு திருச்சி கே.கே.நகரில், 11 ஆயிரம் சதுர அடி இடம் உள்ளது. இந்த இடத்தை தவறுதலாக மாநகராட்சி இடம் என்று பதிவு செய்து விட்டனர். இதை மாற்றித்தர உரிய ஆவணங்களுடன், திருச்சி ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு கோபி விண்ணப்பித்தார்.இதுதொடர்பாக அவர் திருச்சி ஆர்.டி.ஓ., பி.ஏ.,வான தாசில்தார் அண்ணாதுரையை அணுகினார். அவரோ, 'இடத்தின் மதிப்பு கோடிக்கணக்கில் இருப்பதால், இரண்டு லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால், கம்ப்யூட்டர் எஸ்.எல்.ஆரில்., பெயர் மாற்றம் செய்து தருகிறேன்' என, கூறினார். கோபி, திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுறுத்தல்படி, மாலை, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வைத்து, பணத்தை அண்ணாதுரையிடம் கோபி கொடுத்தார். அதை பெற்ற அண்ணாதுரையை போலீசார் கைது செய்தனர்.

ரூ.12,000 லஞ்சம்: பெண் வி.ஏ.ஓ., கைது

பட்டாவில் பெயர் மாறுதல் செய்ய, 12,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, திருநீர்மலை கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.சென்னை, தில்லை கங்கா நகரைச் சேர்ந்தவர் மேகலாதேவி. இவர், பல்லாவரம் சார் - பதிவாளர் அலுவலகத்தில், பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக விண்ணப்பித்து இருந்தார். இந்த விண்ணப்பம், 'ஆன்லைன்' மூலம் திருநீர்மலை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.விண்ணப்பத்தை கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா, 47, ஆய்வு செய்தார். அவரும், கிராம நிர்வாக உதவியாளர் அமுதாவும், மேகலாதேவியை தொடர்பு கொண்டு, பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய, லஞ்சமாக 15,000 ரூபாய் தரவேண்டும் எனக் கேட்டுள்ளனர். பின், பேரம் பேசி 3,000 ரூபாய் குறைத்து 12,000 ரூபாய் தரவேண்டும் எனக் கேட்டுள்ளனர்.இது குறித்து, சென்னை ஆலந்துாரில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில், மேகலாதேவி புகார் அளித்தார். விசாரித்த போலீசார், திருநீர்மலை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில், மேகலாதேவியிடம் இருந்து சங்கீதா, 12,000 ரூபாய் லஞ்சப்பணத்தை வாங்கியபோது கையும், களவுமாக கைது செய்தனர்.

மானியம் விடுவிக்க லஞ்சம்

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த நாடுவனப்பள்ளியை சேர்ந்தவர் கவுரிசங்கர், 47; விவசாயி. இவரது மாமியார் மங்கம்மாள் பெயரில், மானாவாரி தரிசு நில மேம்பாட்டு திட்டத்தில் மாடு வாங்கி, வேளாண் துறை வழங்கும் மானியத்துக்கு விண்ணப்பத்தார். மானியம், 32,000 ரூபாய்க்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, முதல்கட்டமாக அவருக்கு, 20,000 ரூபாய் கிடைத்தது. மீதி, 12,000 ரூபாய் கிடைக்க, வேளாண் அலுவலர் ஒப்புதல் பெற வேண்டும். இதற்காக கவுரிசங்கர் அக்., 15ல், வேப்பனஹள்ளி வேளாண் அலுவலகம் சென்று, உதவி வேளாண் அலுவலர் முருகேசனை சந்தித்தார். அவர், தீபாவளிக்கு பின் வருமாறு தெரிவித்துள்ளார். தீபாவளி முடிந்து சென்றபோது, '5,000 ரூபாய் கொடுத்தால் வங்கி கணக்கில் அடுத்த நாளே மானியம் கிடைக்கும்' என, திரும்பி அனுப்பியுள்ளார்.லஞ்சம் கொடுக்க விரும்பாத கவுரிசங்கர், கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் நேற்று புகாரளித்தார். வேப்பனஹள்ளியில் ஒரு ஓட்டலில் மாலை சாப்பிட்டுக் கொண்டிருந்த முருகேசனிடம் லஞ்ச பணத்தை கவுரிசங்கர் கொடுக்க, அதை முருகேசன் பெற்ற போது, மறைந்திருந்த போலீசார் அவரை கையும், களவுமாக கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

நிக்கோல்தாம்சன்
அக் 24, 2025 06:37

தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழி , முதலில் ஓசி அரசியல்வாதிகளையும் சாலையில் விதியை பயன்படுத்தாமல் அடிதடி செய்யும் அரசியல்வாதிகளையும் வாக்கு எனும் ஆயுதம் கொண்டு விரட்டுவோம் பின்னர் லஞ்சம் மட்டுப்படும்


Mani . V
அக் 24, 2025 06:29

திமுக வின் லட்சம், கோடி லஞ்சம் என்னும் கொள்கைக்கு எதிராக ஆயிரத்தில் லஞ்சம் வாங்கி ஆட்சிக்கு களங்கத்தை உண்டு பண்ணும் இவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.


தியாகு
அக் 24, 2025 00:19

இந்தியாவிலேயே ஏன் உலகிலேயே தற்குறி டுமிழர்கள் மிகவும் வித்தியாசமானவர்கள். இரண்டு லட்சம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை வசை பாடுவார்கள். ஆனால் மக்கள் வரி பணம் இரண்டாயிரம் கோடிகளை ஊழல்கள் மற்றும் லஞ்சங்கள் மூலம் சுருட்டி சொத்து சேர்த்த கட்டுமர திருட்டு திமுகவின் தலைமை குடும்பத்தை, மந்திரிகளை, எம் எல் ஏக்களை மாலை போட்டு ஆரத்தி எடுத்து வரவேற்று தட்டில் ஏதாவது பிச்சை காசு போடமாட்டார்களா என்று பல்லிளிக்க ஏங்குவார்கள். டுமிழர்களுக்கு என்று ஒரு தனி குணம் உண்டு என்று தங்களை தாங்களே அடிக்கடி புகழ்ந்து கொள்வார்களே, அது இதுதானோ?


Anantharaman Srinivasan
அக் 23, 2025 21:59

வேண்டுமென்றே ககணியில் தவறான பெயரை மாற்றம் செய்து விட்டு மாற்றி தருவதற்காக லட்சக்கணக்கில் லஞ்சம் கேட்கின்றனர்.


பாரத புதல்வன்
அக் 23, 2025 21:49

திராவிட விடியலின் எழுச்சி முகத்தில் தெரிகிறது.....அப்படியே திராவிடத்தினை உரித்து வைத்துள்ளது.


chandran
அக் 24, 2025 02:52

பாரத புதல்வன், வேற ஆட்சி வந்தால் தமிழ் நாட்டில் யாருமே லஞ்சம் வாங்க மாட்டாங்களா? என்னங்க பேசுறீங்க? எந்த ஆட்சி வந்தாலும் லஞ்சத்தை ஒழிக்க முடியாது.


ராமகிருஷ்ணன்
அக் 23, 2025 21:43

விடியலின் ஆட்சியில் இந்த உரிமை கூட தாசில்தாருக்கு இல்லையா. என்ன கொடுமை சரவணா இது


MARUTHU PANDIAR
அக் 23, 2025 21:42

பார்வை ஒன்றே போதுமே ..ஆடு திருடினவன் மாதிரி அப்படீங்கறாங்க


kamal 00
அக் 23, 2025 21:37

தல எவ்வழியோ தாசில்தார் அவ்வழி


சமீபத்திய செய்தி