உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தெரு நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த ரூ.20 கோடி ஒதுக்கீடு

தெரு நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த ரூ.20 கோடி ஒதுக்கீடு

சென்னை : 'தனியார் பங்களிப்புடன் தெரு நாய்களின் இனப்பெருக்கம் 20 கோடி ரூபாய் செலவில் கட்டுப்படுத்தப்படும்,' என கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர்அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சட்டசபையில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

ஒருங்கிணைந்த சுகாதார திட்டத்தின்கீழ், 200 கால்நடை டாக்டர்களுக்கு, 20 லட்சம் ரூபாய் செலவில், திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்சென்னை அடையாறு செல்லப்பிராணிகள் சிகிச்சை மையம், நவீன தொழில் நுட்பங்களுடன், தனித்துவம் வாய்ந்த சிகிச்சை மையமாக, 5 கோடி ரூபாயில் தரம் உயர்த்தப்படும்ஆடு இனங்கள் உற்பத்தி மற்றும் இனப்பெருக்கத்தை மேம்படுத்த, 'தமிழ்நாடு மாநில வெள்ளாடு, செம்மறி ஆடு உற்பத்தி மற்றும் இனப்பெருக்க கொள்கை' உருவாக்கப்படும்சென்னை, கோவையில், 5 கோடி ரூபாயில், செல்லப் பிராணிகளுக்கு, புத்துணர்வு பூங்கா, மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்படும்ஆதரவற்ற, கைவிடப்பட்ட, விபத்துகளில் காயமடைந்த கால்நடைகளை பாதுகாக்க, பராமரிப்பு நிலையங்கள், வள்ளலார்பல்லுயிர் காப்பகங்கள், 5 கோடி ரூபாயில் உருவாக்கப்படும்.தெருக்களில் சுற்றித்திரியும், தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் பணி, தனியார் பங்களிப்புடன், பிராணிகள் நல வாரியம் வாயிலாக, 20 கோடி ரூபாயில்விரிவுப்படுத்தப்படும்தெரு நாய்கள், கால்நடைகள் இடையில் மோதல், தெரு நாய், கால்நடைகள், மனிதர்கள் இடையிலான மோதலை கையாள, 'ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட கால்நடைகளுக்கான கொள்கை' உருவாக்கப்படும்கால்நடை வளர்ப்பு தொழிலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் நவீன தொழில் நுட்பங்களை, கால்நடை வளர்ப்போர் அறிந்துகொள்ள, 2 கோடி ரூபாயில், 'கால்நடை பராமரிப்பு தொழில் நுட்ப பயிற்சி திட்டம்' செயல்படுத்தப்படும்வெள்ளாடு, செம்மறி ஆடு இனவிருத்தி பண்ணைகள் அமைக்க, 50 சதவீத மானியம் வழங்கப்படும்நிலமற்ற விவசாய தினக்கூலி பயனாளிகளுக்கு, நாட்டின கோழி குஞ்சுகள் வழங்கும் திட்டம், 50 சதவீத மானியத்தில் செயல்படுத்தப்படும்கால்நடை விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு, தொழில்நுட்பங்கள் வாயிலாக தீர்வு ஏற்படுத்த, 'கால்நடை தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் மேலாண்மை குழு' அமைக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

angbu ganesh
ஏப் 04, 2025 09:39

அப்படியே தீயகும்மாவின் 200 ருப்பீஸ் அடிமைகளின் ஒழிக்க ஏதாச்சும் மருந்து போடுங்க saar


V RAMASWAMY
ஏப் 04, 2025 08:38

தெரு நாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவா அல்லது சம்பந்தப்பட்டவர்களின் பணப்பெருக்கத்திற்கு கோடிக்கணக்கில் ஒதுக்கீடா?


PalaniKuppuswamy
ஏப் 04, 2025 07:44

வருட வருடம் 10 கோடி .. ஒதுக்கீடு அல்ல . பதுக்கீடு . சரியாக வார்த்தையை பொருத்தமாக உபயோகிக்கவும்


moulee
ஏப் 04, 2025 06:53

முதல்ல அரசியல்வாதிகள் மற்றும் கரை வேஷ்டிஇனப்பெருக்கத்த கட்டுப்படுத்தனும்


raja
ஏப் 04, 2025 06:33

வாத்தியாருக்கு சம்பளம் கொடுக்க வக்கில்லை.. போக்குவரத்து ஊழியருக்கு ஓய்வு ஊதியம் வழங்க நிதி இல்லை இந்தக்கேடுகெட்ட விடியா மூஞ்சிகள் ஆட்சியில் ... இருவது கோடி ....


கிருஷ்ணன்_பொள்ளாச்சி
ஏப் 04, 2025 06:28

கரையான் எலி அணில் நாய் போன்ற ஜீவன்கள் தான் பாவம்


மணி
ஏப் 04, 2025 06:22

ஒரு பழமொழி ஞாபகம் வருது பொழப்பு கெட்ட .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை