உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழில் பெயர் வைக்காவிட்டால் ரூ.2,000 அபராதம்: சாமிநாதன்

தமிழில் பெயர் வைக்காவிட்டால் ரூ.2,000 அபராதம்: சாமிநாதன்

சென்னை : ''தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு விதிக்கப்படும் அபராதம், 50 ரூபாயில் இருந்து, 2,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது,'' என, அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:தி.மு.க., - இனிகோ இருதயராஜ்: திருச்சி பாலக்கரை, பிரபாத் திரையரங்கம் அருகில், நடிகர் சிவாஜி கணேசனுக்கு நிறுவப்பட்ட சிலையை திறக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.அமைச்சர் சாமிநாதன்: ரசிகர் மன்றம் சார்பில் அந்த சிலை வைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் அமைச்சர் நேரு, சிலை அமைக்க நிதி கொடுத்துள்ளார். சிலை திறக்க முடியாததற்கு, உச்ச நீதிமன்ற தீர்ப்பு தான் காரணம். பொது இடங்களில் சிலை வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, சிலை மூடி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வருடன் கலந்து பேசி, தகுந்த இடத்தை தேர்வு செய்து, அங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இனிகோ இருதயராஜ்: திருச்சி மாநகராட்சி தீர்மானத்துடன், 9 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டது.கடந்த 2018ல் தொடர்ந்த வழக்கில், நகரின் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் சிலையை நிறுவி, மரியாதை செலுத்த நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. சத்திரம் பஸ் நிலையம் அல்லது பாலக்கரை கால்நடை மருத்துவமனை அருகில் அமைத்து தர வேண்டும்.அமைச்சர் சாமிநாதன்: முதல்வர் அனுமதி பெற்று, மக்கள் அதிகம் கூடும் இடத்தில், மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் அனுமதியுடன் சிலை வைக்கப்படும்.இனிகோ இருதயராஜ்: வணிக நிறுவனங்கள், கடைகளின் பெயர் பலகையை தமிழில் எழுத வேண்டும் என சட்டம் உள்ளது. பல நிறுவனங்கள் ஆங்கிலத்தில் பெரிதாக வைத்து, தமிழில் சிறிதாக எழுதி உள்ளனர். சிலர் பெயர் எழுதுவதில்லை. காலக்கெடு கொடுத்து, தமிழில் பெயர் எழுதாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.அமைச்சர் சாமிநாதன்: வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம். தொழிலாளர் நலத் துறை இதை செயல்படுத்துகிறது. வியாபாரிகளும் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.தமிழில் பெயர் பலகை இல்லாவிட்டால், 50 ரூபாய் அபராதம் என்பது 2,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும், சட்டத்தின் அடிப்படையை விட, மன ரீதியாக மாற்றத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம். விரைவில் அந்த நிலைமை வரும். கொ.ம.தே.க., - ஈஸ்வரன்: சுதந்திரப் பேராாட்ட தியாகி ஓமந்துாரார் ராமசாமி ரெட்டியாருக்கு, அவரது பெயரில் சென்னையில் உள்ள அரசினர் தோட்டத்தில் முழு உருவச்சிலை அமைக்க வேண்டும். அமைச்சர் சாமிநாதன்: முதல்வருடன் கலந்து பேசி, நிதி நிலைக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.காங்., - தாரகை கத்பெட்: குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்ததை நினைவுகூரும் வகையில், களியக்காவிளையில் நினைவு வளைவு திறக்க வேண்டும்.அமைச்சர் சாமிநாதன்: இந்த ஆண்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில், பொன்னப்ப நாடாருக்கு சிலை அமைக்க, முதல்வர் அனுமதி கொடுத்துள்ளார். உறுப்பினர் கோரிக்கை, முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு, எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Matt P
ஏப் 23, 2025 07:57

அமைச்சர் சாமிநாதன்: முதல்வருடன் கலந்து பேசி, நிதி நிலைக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்/ முன்னாள் முதல்வர் ஓமந்தூரார் ராமசாமிக்கு ஒரு சிலை வைக்க நிதி நிலையை ஆராய வேண்டியதாயிருக்குது ஈரோட்டு ராமசாமி சிலை என்றால் நிதி நிலை பிரச்னை இருக்காது. முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு எத்தனை சிலை வைக்க வேண்டும் என்றாலும் நிதி பிரச்னை இருக்காது. எழுதுற பேனாவுக்கு சிலை வைக்க பிரச்னை நிதி பிரச்னை இல்லை. தமிழ்நாடும் இவர்களை நம்புகிற தமிழ்நாடும் உருப்பட்டாப்ல தான். சிலை வைப்பதே ஒழிய வேண்டும் முதலில். சிவாஜியை பார்க்க வேண்டும் என்றால் அவர் திரைப்படங்களை பார்த்தாலே போதும். பொன்னப்ப நாடாரும் குமரி ஆனந்தனும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர்கள். பொன்னப்ப நாடாருக்கு சிலை வைத்தால் குமரி ஆனந்தனுக்கும் சிலை வைக்க வேண்டுமே. பொன்னப்ப நாடாரை விட குமரி அனந்தன் பிரபலமானவர். பொன்னப்ப நாடார் நல்ல மனிதர் என்று பெயர் எடுத்தவர்.


pv, முத்தூர்
ஏப் 22, 2025 17:34

பால்டயர் பாபு, பாத்திமா பாபு - தமிழ்பெயரானு யாரவது சொல்லுங்க


Sakshi
ஏப் 22, 2025 11:39

அப்போ முதல்வருக்கு அபராதம் உண்டா. அல்லது முதல்வர் தன் பெயரை சுடாலின் மாற்றுவாரா மாற்றுவார்


சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 22, 2025 09:40

அம்பது வருஷத்துக்கும் மேலான உருட்டல் இதுவாகத்தான் இருக்கும் .1971 ல் இப்படி சொல்லி மதுரை டவுன்ஹால் ரோட்டுக்கு நகர்மன்றச்சாலை ன்னு பேரு மாத்தினாங்க .இன்னிக்கும் அது டவுன்ஹால் ரோடாத்தான் இருக்கு .


Matt P
ஏப் 22, 2025 09:21

தமிழில் பெயர் வைக்காத முதல்வருக்கு என்ன அபராதம்?


சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 22, 2025 12:11

முதலில் தமிழ் கலாச்சாரப்படி அவரை வேஷ்டி அணிய சொல்லுங்கள் பார்ப்போம்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 22, 2025 12:42

எத்தனை பேர்களுக்கு ஞாபகம் இருக்கிறது தெரியவில்லை. திரு பாலகுருசாமி அண்ணா பல்கலை துணைவேந்தராக இருந்த சமயம். வெளிநாட்டு பிரமுகர்களுடன் ஒரு நிகழ்ச்சி. அதற்கு அவர் கோட்டு சூட்டு டை சகிதம் வந்திருந்தார் அன்புக்கும் பண்புக்கும் பாசத்திற்கும் உரிய மேதகு கனிமொழியார் அவர்கள், பாலகுருசாமி அவர்கள் தமிழ் கலாச்சாரப்படி உடை அணிந்திருக்கவேண்டும். அயல் நாட்டினருக்கு நம் தமிழ் கலாச்சாரத்தை எடுத்துக்காட்டி இருக்க வேண்டும் என்று சாடினார். ஆனால் இன்று தமிழ் நாட்டு முதலமைச்சர் அவர்களோ, காமராஜர் பக்தவத்சலம், அண்ணாதுரை கருணாநிதி எம் ஜி இராமச்சந்திரன், ஒ பன்னீர் செல்வம் எடப்பாடி பழனிச்சாமி என அத்தனை முதல்வர்களும் தமிழ் கலாச்சாரத்தைப் பின்பற்றிய போதும் தான் மட்டும் அவர்கள் அத்தனை பேர்களில் இருந்தும் மாறுபட்டவராக வேஷ்டி அணிய மாட்டேன் என்று சபதம் எடுத்துள்ளார் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் கலாச்சாரம்


Matt P
ஏப் 22, 2025 09:20

தமிழில் பெயர் இல்லாத முதல்வருக்கும் அபராதம் உண்டா? ..இல்லை அவரே பெயரை மாற்றிக்கிடுவாரா?


M S RAGHUNATHAN
ஏப் 22, 2025 09:10

வெட்கம் ஆக இல்லை?


sankaranarayanan
ஏப் 22, 2025 09:05

ஏனப்பா தெருவுக்கு தெரு சிலைகள் வையுங்கள் அது ஒன்றுதான் இந்த திராவிட மாடல் ஆட்சியில் நடத்தப்படுகின்ற ஒரே ஒரு வைபவம் பிறகு தெருக்களின் பெயர்ப்பலகையில் உள்ள பெயர்களை மாற்றுவார்கள் வேறு எந்த முன்னேற்றமமுமில்லாத திராவிட முன்னேற்ற மாடல் கட்சி


VENKATASUBRAMANIAN
ஏப் 22, 2025 07:43

முதலில் தமிழை ஒழுங்காக பேச கற்றுக்கொடுங்கள். நிறைய பேருக்கு எழுதவே தெரியாது. இதுதான் ஆட்சியின் லட்சணம்


நிக்கோல்தாம்சன்
ஏப் 22, 2025 06:50

இது வணிகம் செய்யும் எல்லாருக்கும் பொருந்தும் தானே? சன், மூன் என்று இருப்பவை எல்லாம் வேறு மொழி பெயர்கள் என்பதனை நினைவு வைத்து கொள்ளுங்க அமைச்சரே


Matt P
ஏப் 22, 2025 09:27

சாப்லின் தமிழ் பெயரா?


நிக்கோல்தாம்சன்
ஏப் 24, 2025 09:26

, அவர் வணிகம் என்று சொல்லியதால் நான் அந்த கார்பொரேட் வணிக குடும்பத்தை அதன் அளவளாவி வணிக நிறுவனங்களை குறிப்பிட்டேன் , நீங்க தனிமனித பெயரை பற்றி கேட்டால்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை