உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தம்பதியிடம் ரூ.21 லட்சம் மோசடி

தம்பதியிடம் ரூ.21 லட்சம் மோசடி

கோவை, : கோவை, ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் சங்கர், 62. இவரது வீட்டின் கீழ்தளத்தில் பெற்றோர் அனந்த நாராயணன், சீதாலட்சுமி வசிக்கின்றனர். சில நாட்களுக்கு முன், வீட்டில் உள்ள லேண்ட்லைன் போனுக்கு ஓர் அழைப்பு வந்தது.நாராயணன் பேசிய போது, மறுமுனையில் பேசியவர், வங்கியில் இருந்து பேசுவதாகவும், வங்கி கணக்குகளை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என்றும், வங்கி கணக்கு மற்றும் ஏ.டி.எம்., கார்டு விபரங்களை தெரிவிக்குமாறும் கூறியுள்ளார்.இதை நம்பி, அவரும் எல்லா விபரங்களையும் தெரிவித்துள்ளார். சிறிது நேரத்தில், அவர்கள் வங்கி கணக்கில் இருந்த, 21.56 லட்சம் ரூபாயை, மர்ம நபர் எடுத்து விட்டார். அனந்த நாராயணன் போலீசில் புகார் அளித்தார். கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ