உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மது விலை உயர்வால் ரூ.2,400 கோடி கூடுதல் வருமானம்

மது விலை உயர்வால் ரூ.2,400 கோடி கூடுதல் வருமானம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'டாஸ்மாக்' கடைகளில், மதுபானங்களின் விலை நாளை முதல் உயர்த்தப்படுகிறது. இதனால், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு, 2,400 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=uysh1pgb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 4,820 மதுக்கடைகளை நடத்துகிறது. அவற்றில் தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய்க்கும்; விடுமுறை தினங்களில் அதிகமாகவும் மதுபானங்கள் விற்பனையாகின்றன.மது வகைகள் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வை மற்றும் மதிப்பு கூட்டு வரி வாயிலாக, அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. அதன்படி, உதாரணமாக, 100 ரூபாய்க்கு மது விற்றால், 83 ரூபாயும்; பீர் விற்றால், 73 ரூபாயும் வருவாய் கிடைக்கிறது. மகளிருக்கு மாதம், 1,000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்தால், தமிழக அரசின் நிதிச்சுமை அதிகரித்துள்ளது. இதை சமாளிக்க, மதுபானங்கள் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது.இதையடுத்து, நாளை முதல் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சாதாரண, நடுத்தர வகை, குவார்ட்டருக்கு 10 ரூபாயும்; உயர்தர குவார்ட்டருக்கு 20 ரூபாயும்; பீர் விலை 10 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.கடந்த, 2022 - 23ல் மது வகைகள் மீதான ஆயத்தீர்வை வாயிலாக, 10,401 கோடி ரூபாய்; மதிப்பு கூட்டு வரியாக, 33,697 கோடி ரூபாய் என, மொத்தம், 44,098 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Krismoo
ஜன 31, 2024 16:33

ஸ்பைன்ல இருந்து பாரின் சரக்கா முதலாளிகளை கொண்டு வந்து தமிழ் நாட்டுல கொட்ட சொல்லுங்க புண்ணியமா போகும். குடிப்பதும் குடிக்கிறோம் பாரின் சரக்கா குடிக்கிறோம்.


g.s,rajan
ஜன 31, 2024 16:26

உற்சாக பானத்தை எவ்வளவு விலை கொடுத்தும் வாங்க மக்கள் தயாராக உள்ளனர்.....


duruvasar
ஜன 31, 2024 13:48

அரசு ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் வேலை பார்க்க மாட்டார்கள் என்ற அழுத்தத்தால் தான் அரசு இந்த கடினமான முடிவை எடுத்திருப்பார்கள் என்பதை மது பிரியர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.


ram
ஜன 31, 2024 11:34

எப்படியும் திருட்டு திமுக ஆட்கள் இதர்கும் முட்டு கொடுப்பார்கள் இல்லயென்றால் இருநூறு கிடைக்காது


g.s,rajan
ஜன 31, 2024 11:27

மது விலை உயர்வுக் கவலையில் குடிமகன்களுக்கு மேலும் ஒரு கட்டிங் அதிகமாகும்.... ....


sridhar
ஜன 31, 2024 11:17

இலவசங்கள் நம்மை சீரழிக்கின்றன. ஆயிரம் ருபாய் வாங்கும் குடும்பங்களும் அழிகின்றன. அந்த ருபாய் டாஸ்மாக் கடைக்கு தான் போகுது.


angbu ganesh
ஜன 31, 2024 10:08

6000 பொங்கலுக்கு 1000 சூப்பர் ஸ்டாலின் எதிர்பார்த்த ஒன்றுதான், ஆனா மக்களுக்குத்தான் புரியனும் ஏன் இப்போ இளம் விதவைகள் உருவாக வாய்ப்பில்லையா சார்


angbu ganesh
ஜன 31, 2024 10:06

6000 PONGALUKKU


ராஜா
ஜன 31, 2024 07:27

திமுக காட்டில் மழை தான்.


chennai sivakumar
ஜன 31, 2024 07:23

இந்த விலை உயர்வு அண்டை மாநிலமான pondicherry யில் இருந்து மது கடத்தலுக்கு உதவுகிறது. மேலும் checkpost களில் செம்ம சில்லறை கிடைக்க வழி செய்து உள்ளது. ஆக மொத்தத்தில் விலை உயர்வால் எதிர்பார்க்கும் வருவாய் நிச்சயமாக கிடைக்காது


மேலும் செய்திகள்











புதிய வீடியோ