உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., நிர்வாகியிடம் ரூ.3 லட்சம் பறிமுதல்

அ.தி.மு.க., நிர்வாகியிடம் ரூ.3 லட்சம் பறிமுதல்

உசிலம்பட்டி : மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அதிகாரி ஹரிகரன் தலைமையிலான பறக்கும் படையினர் பேரையூர் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.காராம்பட்டி அ.தி.மு.க., கிளைச் செயலாளர் கிருபாகரன் 29, காரை தடுத்து சோதனையிட்டனர். அதில் ஆவணங்கள் இல்லாமல் ரூ.3 லட்சம் பணம் இருந்தது. கான்ட்ராக்ட் பணிக்காக கொண்டு செல்வதாக தெரிவித்தார். பறிமுதல் செய்த அதிகாரிகள் அதற்கான ஆவணங்களை கொடுத்து பெற்றுச் செல்லுமாறு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை