உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லஞ்ச ஊழியர்களுக்கு ரூ.33 கோடி பிழைப்பூதியம்; மக்கள் பணம் வீண்!

லஞ்ச ஊழியர்களுக்கு ரூ.33 கோடி பிழைப்பூதியம்; மக்கள் பணம் வீண்!

சென்னை: ''கடந்த மூன்று ஆண்டுகளில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட 1,200 அரசு ஊழியர்களுக்கு, 33 கோடி ரூபாய் பிழைப்பூதியம் வழங்கி, பொதுமக்களின் வரிப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது,'' என, சட்டப் பஞ்சாயத்து இயக்கத் தலைவர் சிவ இளங்கோ தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:

அரசு துறையில் லஞ்சம் பெற்றதால், தற்காலிக மற்றும் நிரந்த பணி நீக்கம் செய்யப்பட்டவர் குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக தகவல்கள் பெறப்பட்டன. தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுவோர் மீதான குற்றச்சாட்டு மீது, ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும். குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், அவர் நிரந்த பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்படும்போது, அவருக்கு பிழைப்பூதியமாக, அவர் பெற்ற ஊதியத்தில் 50 சதவீதம் ஆறு மாதம் வழங்கப்படும். விசாரணை ஆறு மாதங்களுக்கு மேல் சென்றால், பிழைப்பூதியம் 75 சதவீதம் வழங்கப் பட வேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி, 2019 முதல் 2022 வரை மூன்று ஆண்டுகளில், ஊரக வளர்ச்சித் துறை உட்பட ஐந்து துறைகளில் மட்டும், லஞ்சம் பெற்று தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட 1,200 ஊழியர்களுக்கு, 33 கோடி ரூபாய் பிழைப்பூதியமாக அரசால் வழங்கப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியத்தில் அதிகபட்சமாக 17.67 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து துறைகளையும் கணக்கிட்டால், மாதம் 200 கோடி ரூபாய் வரை ஊழியர்களுக்கு பிழைப்பூதியமாக வழங்கப்படுகிறது. அதாவது, எந்த வேலையும் செய்யாமல், நுாற்றுக்கணக்கான அரசு ஊழியர்கள், கடந்த 20 ஆண்டுகளாக ஊதியம் பெற்று வருகின்றனர். இவர்கள் மீதான விசாரணையை விரைந்து முடிக்க, அதிகாரிகள் முன்வருவதில்லை. அவர்களை காப்பாற்றும் நோக்கில், பொதுமக்களின் வரி பணத்தை வீணடிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

P.Sekaran
நவ 06, 2025 11:27

லஞ்சம் வாங்கி பிடிப்பட்டால் நிறந்தர பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். பிழைப்பூதியம் தந்தால் எல்லா ஊழியர்களும் துணிந்து லஞ்சம் வாங்கதான் செய்வார்கள். நமது நாட்டில் இதற்கு ஏற்ற தண்டனை இது வரை கொண்டுவர வில்லை. பாராளுமன்றத்தில் இதற்காக சட்டம் இயற்றினால் மட்டுமே சாத்தியம் ஆகும். இதற்கு எதிர் கட்சிகள் எதிர்பார்கள். லஞ்சம் எங்கும் நிறைந்திருக்கிறது. அரசு ஊழியர்களும் அரசியல் வாதிகளும் லஞ்சத்தில் திளைத்தவர்கள். இவர்கள் துணிந்து செயல்பட மாட்டார்கள். இது மாதிரி கருத்தை தான் பதிவு செய்யமுடியும்


visu
நவ 06, 2025 11:19

இவர்கள் அளிக்கும் தணடனைகள் தண்டனை போலவே இல்லை 75 % ஊதியம் வாழ்நாள் முழுதும் கொடுத்தால் எதிர்க்கும் தயங்க மாட்டார்கள்


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
நவ 06, 2025 09:33

சபாஷ்....லஞ்சத்துக்கே லஞ்சமா? திருட்டு திராவிட மாடல்னா சும்மாவா?


V RAMASWAMY
நவ 06, 2025 08:48

தானாக முன்வந்தோ அல்லது மத்திய அரசு ஒரு சட்டம் இயற்றியோ, லஞ்சம் பெற்ற குற்றவாளிகளுக்கு பணி நீக்கம், ஓய்வூதிய ரத்து, அபராதம், சொத்து பறிப்பு, சிறை தண்டனை கண்டிப்பாக கொடுக்க முயற்சி செய்யவேண்டும்.


duruvasar
நவ 06, 2025 07:49

கையூட்டு வாங்கியவரின் ஓட்டு இருக்கிறதே. அதில் கைவைத்தால் அவர்களிடம் ஓட்டுக்கு திருவோடு ஏந்தவேண்டியிருக்கும்.


சிட்டுக்குருவி
நவ 06, 2025 06:42

லஞ்சம் வாங்கி கையும்களவுமாக பிடிபட்டால் உடனடி டிஸ்மிஸ் ,எந்தபணபலநும் இல்லை என்ற ஒரு சட்டம் இருந்தால் லஞ்சம் முழுவதும் ஒழியும் .சாராயம் விற்க உள்ள ஆர்வத்தை லஞ்சம் ஒழிப்பதிலும் அரசு காட்டவேண்டும் .


புதிய வீடியோ