உயர்கல்விக்கு ரூ.34,710 கோடி
சட்டசபையில் அவரது பதிலுரை:உயர்கல்விக்துறைக்கு நடப்பாண்டு 8,495 கோடி ரூபாயை, முதல்வர் ஒதுக்கி தந்துள்ளார். கடந்த, 10 ஆண்டுகளில், அ.தி.மு.க., ஆட்சியில், 36,785 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டது. தி.மு.க., ஆட்சியில், நான்கு ஆண்டுகளில், உயர்கல்வித்துறைக்கு 34,710 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சியில், 37 கல்லுாரிகளை அரசு திறந்துஇருக்கிறது. நிதிச்சுமையிலும், புதிய கல்லுாரிகளை முதல்வர் தந்துள்ளார்.