உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாணவியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

மாணவியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

சென்னை: பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழந்த 7 ஆம் வகுப்பு மாணவி கவிபாலாவின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தஞ்சாவூர் மாவட்டம் சொக்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் - பரிமளா தம்பதியின் மகள் கவி பாலா,12, பள்ளத்துார் அரசு மேல்நிலைப் பள்ளியில், 7ம் வகுப்பு படித்து வந்த நிலையில், நேற்று பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். உயிரிழந்த மாணவி கவிபாலாவின் இறப்பு அவரது குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என்று தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவரது குடும்பத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Gladsonraj
பிப் 13, 2025 06:56

நிஜமா


PalaniKuppuswamy
பிப் 11, 2025 20:27

பூச்சி மாத்திரை என்று விஷ மாத்திரையை கொடுத்து விட்டார்கள் . முதலை கண்ணீர் விடும் முதல்வர் . பூச்சி மாத்திரை உரிமையாளரை பொறுப்பு ஆக்கி உள்ளே தள்ளி தண்டனை வாங்கி கொடுத்தால் உண்மை என்று நம்பலாம் .


என்றும் இந்தியன்
பிப் 11, 2025 18:09

அந்த மாணவி கள்ளச்சாராயம் குடித்து இறந்தாள் என்று வழக்கு அதிவு செய்திருந்தால் ரூ 10 லட்சம் கிடைத்திருக்கும் என்ன ஸ்டாலின் சரி தானே


சமீபத்திய செய்தி