மேலும் செய்திகள்
தமிழகத்தின் மிகப்பெரிய வரலாற்றுப் பிழை: நயினார் நாகேந்திரன்
5 hour(s) ago | 11
சம ஊதியம் கேட்டு போராடிய ஆசிரியர்கள் கைது: இபிஎஸ், அன்புமணி கண்டனம்
6 hour(s) ago | 5
சென்னை:சென்னையில் சட்ட விரோதமாக பிரமாண்டமான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், முன்னாள் எம்.எல்.ஏ., - எம்.பி., மேயர், அரசியல் கட்சியின் முக்கிய பிரமுகர்களுக்கு, 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த, கட்டு மான நிறுவனங்களின் உரிமையாளர்கள் வீடு, அலுவலகம் என, ஐந்து இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.சென்னை, பெரம்பூர் பேரக்ஸ் சாலையில், பின்னி மில் செயல்பட்டு வந்தது. தொழிலாளர் பிரச்னை காரணமாக மூடப்பட்டு, பாழடைந்த இடம் போல கிடந்தது. இந்த இடத்தை வாங்கி, பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி விற்க, சென்னை தி.நகரில் செயல்படும், 'லேண்ட்மார்க் ஹவுசிங் பிராஜக்ட்ஸ்' நிறுவன இயக்குனர் உதயகுமார் மற்றும் 'கே.எல்.பி., பிராஜக்ட்ஸ்' நிறுவன இயக்குனர் சுனில் கேத்பாலியா ஆகியோர் முடிவு செய்தனர்.அதன்படி, பின்னி நிறுவனத்திடம் இருந்து இடத்தை வாங்கி, அ.தி.மு.க., ஆட்சியில் இருந்தபோது, 2015ல், பிரமாண்டமான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி துவங்கப்பட்டது. இதற்காக, சி.எம்.டி.ஏ., எனப்படும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அனுமதி பெற, அதிகாரிகளை அணுகினர்; சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதனால், கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து, சட்ட விரோதமாக அனுமதி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். உதயகுமார் உள்ளிட்டோரிடம் வாக்குமூலமும் பெற்றனர்; சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க, லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டது. அதன்படி, லஞ்ச ஒழிப்பு போலீசார், 2019, மே 28ல் விசாரணையை துவக்கினர். அ.தி.மு.க., ஆட்சியில், எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., மேயர், கவுன்சிலர்கள் மற்றும் சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு, 50.86 கோடி ரூபாய் லஞ்சமாக கொடுத்து, சட்ட விரோதமாக அனுமதி பெற்றதாக, உதயகுமார் உள்ளிட்டோர் வாக்குமூலம் அளித்துஉள்ளதாக தெரிகிறது. அதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து, யார் யாருக்கு எவ்வளவு தொகை லஞ்சமாக கொடுத்தனர் என்ற விபரத்தையும் பதிவு செய்துள்ளனர். அதில் தற்போது அமைச்சராக இருக்கும் ஒருவரின் பெயரும் இடம்பெற்றுஉள்ளது.அதன் அடிப்படையில், சென்னை தி.நகரில் உள்ள உதயகுமார் வீடு, பெரம்பூரில் பின்னி மில் வளாகத்தில் உள்ள கட்டுமான நிறுவன அலுவலகம், மனீஷ் பார்மர், சுனில் கேத்பாலியா வீடுகள் என, ஐந்து இடங்களில் நேற்று காலை, 6:30 மணியில் இருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
5 hour(s) ago | 11
6 hour(s) ago | 5