உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வக்கீல் வீட்டில் ரூ.50 லட்சம் 50 சவரன் திருட்டு

வக்கீல் வீட்டில் ரூ.50 லட்சம் 50 சவரன் திருட்டு

மயிலம், : வழக்கறிஞர் வீட்டில் வைத்திருந்த, 50 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 50 சவரன் நகைகள் திருடு போனது குறித்து மயிலம் போலீசார் விசாரிக்கின்றனர். விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே ஏரளிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்; வழக்கறிஞர். இவர் வீட்டில் உள்ள பீரோவில், 50 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும், 50 சவரன் நகைகளை வைத்திருந்தார். நேற்று முன்தினம் பீரோவை திறந்து பார்த்த போது, நகை மற்றும் பணத்தை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம், மயிலம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Perumal Pillai
ஆக 04, 2025 13:50

கிரிமினல் வக்கீலாக இருக்கும் .


seshadri
ஆக 04, 2025 12:39

பணம் எப்படி ஐம்பது லட்சம் வைத்திருந்தார் எனில் அது கள்ள பணம் ஆகவே இருக்கும்.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஆக 04, 2025 10:09

முறையற்ற முறையில் பிறர் பொருளை தன் வீட்டிற்கு மாற்றிவைத்து பாதுகாப்பது...திருட்டுஆகாது ... அது வக்கீல் வீட்டில் நடந்தாலும்... எந்த கொம்பனாலும் குறைசொல்ல முடியாத முதல்வரின் இரும்பு கரத்திற்ககு வேலை வந்துவிட்டது. இனி மதவாதம் உள்ளே நுழையாது, இது பெரியார்மண் ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை