உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.5,000 லஞ்சம்: போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ., ஏட்டு கைது

ரூ.5,000 லஞ்சம்: போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ., ஏட்டு கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பறிமுதல் செய்த அசல் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு எண் சான்றிதழை திரும்ப ஒப்படைக்க, 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து எஸ்.ஐ., மற்றும் தலைமை காவலர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.சென்னையில், வின்சென்ட் செல்வகுமார் என்பவர், 'கால் டாக்சி' ஓட்டி வருகிறார். ஜன., 5ம் தேதி கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலையில் சென்றுள்ளார். அப்போது, பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதியுள்ளார். இதனால், அந்த பெண்ணுக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது.இந்த விபத்து குறித்து, அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். எஸ்.ஐ., லட்சுமணபெருமாள், தலைமை காவலர் விஜயபாஸ்கர் ஆகியோர், வின்சென்ட் செல்வகுமாரிடம், அவரின் அசல் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு எண் சான்றிதழை பறிமுதல் செய்துள்ளனர்.இதை திரும்ப ஒப்படைக்க, 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். இதுகுறித்து, வின்சென்ட் செல்வகுமார், சென்னை லஞ்ச ஒழிப்பு துறை தலைமை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு அலுவலகத்தில், எஸ்.ஐ., லட்சுமணபெருமாள், தலைமை காவலர் விஜயபாஸ்கர் ஆகியோர் வின்சென்ட் செல்வகுமாரிடம் லஞ்சம் வாங்கியபோது, இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

sugumar s
பிப் 20, 2025 16:21

தமிழ் படிச்சிருப்பான் மடையன். 5000 வாங்கின அர்ரெஸ்ட் தான் பண்ணுவாங்க. 50 கோடி வாங்கியிருந்தால் எல்லோரும் கைகட்டி ஸலாம் போடுவாங்க.


Barakat Ali
பிப் 20, 2025 10:35

ஒரு அறைக்குள் பணத்தைப் போட்டு அவர்களை உள்ளே தள்ளி, வெளியே பூட்டுங்கள் .... சோறு, தண்ணி கூடாது ....


rasaa
பிப் 20, 2025 10:10

ஏற்பது இகழ்ச்சி. இதன் பொருள் அரசு ஊழியர்களுக்கு தெரியுமா? தமிழ்தான். இந்தி அல்ல.


Nallavan
பிப் 20, 2025 08:25

அனைத்து துறைகளிலும் இவாறு கடுமையான லஞ்சம் ஒழிக்கப்படுமேயானால், தி மு க ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது


கூமூட்டை
பிப் 20, 2025 08:34

மனித இனம் இருக்கும் வரை லஞ்சம் அழியாது. வாழ்க வளமுடன் அரசியல் ஊழல் வாதிதக்காளி


வெள்ளைச்சாமி,அறந்தாங்கி
பிப் 20, 2025 08:47

ஆறு அறிவு உள்ளவர்களுக்கு தெரியும் திமுக ஆட்சியில் இருக்கும் வரை லஞ்தத்தை ஒழிக்க முடியாது என்பது சில ஐந்தறிவு ஜீவன்களுக்கு அது புரிவதில்லை...


ramesh
பிப் 20, 2025 09:38

ஆறு அறிவு உள்ளவனுக்கு மட்டுமே தெரியும் அனைத்து கட்சிகளிலில் யார் ஆட்சிக்கு வந்தாலும் லஞ்சத்தை ஒழிக்கமுடியாது என்று. முதலில் லஞ்சத்தை ஆதரிப்பவர்களே அவர்கள் தானே . அதனால் அதிகாரிகள் மேலும் துணிச்சலுடன் லஞ்சத்தை அங்கீகரிக்க படாத கட்டணமாக மாற்றி விட்டார்கள்


Raghavan
பிப் 20, 2025 12:12

ஆரம்பித்ததே ஓசி ரயில் காரன். பிறகு அவனுடைய பையன், பேரன் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்கள். வழிவழியாக வருகிறது. பிறகு மற்றவர்கள் ஏன் வாங்கமாட்டார்கள்.


அனுஜன்
பிப் 20, 2025 08:13

அஞ்சாயிரம் எல்லாம்.ஒரு பிச்சைக் காசு. ஏன் இவ்ளோ குறைச்சலா வாங்கி எங்க மானத்த வாங்கறேன்னு கைது பண்ணியிருப்பாய்ங்க.


சமீபத்திய செய்தி