உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.5,000 உதவித்தொகை: பா.ம.க., நிழல் பட்ஜெட் வெளியீடு

வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.5,000 உதவித்தொகை: பா.ம.க., நிழல் பட்ஜெட் வெளியீடு

சென்னை: பா.ம.க., நிழல் பட்ஜெட்டை இன்று வெளியிட்டார் கட்சியின் தலைவர் அன்புமணி.பா.ம.க., வெளியிட்டுள்ள இந்த பொது நிழல் நிதிநிலை அறிக்கையில் மொத்தம் 109 தலைப்புகளில் 359 யோசனைகள் அரசுக்கும் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமையும்படி உருவாக்கப்பட்டுள்ளது.பா.ம.க., நிழல் பட்ஜெட் வெளியீட்டில் கூறப்பட்டுள்ளதாவது:*படித்துவிட்டு 5 ஆண்டுக்கும் மேலாக வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.*குழந்தைகளுக்கு பெயர் சூட்ட தனித் தமிழ் பெயர்கள் பட்டியல் வெளியிடப்படும்.* பெயர்ப்பலககைளை தமிழில் எழுதாத கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம். 3 முறைக்கு மேல் அபராதம் செலுத்தும் கடைகளின் வணிக உரிமம் ரத்து செய்யப்படும்.* சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.500 மானியம் வழங்கப்படும். இனி ஒரு சிலிண்டர் ரூ.318 க்கு கிடைக்கும்.* மே 1 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும். உள்ளிட்ட 109 தலைப்புகளில் 359 யோசனைகள் பா.ம.க., நிழல் நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

R.Varadarajan
மார் 13, 2025 06:09

அத்தைக்கு மீசை முளைக்கும்போது தானே?


Raj
மார் 11, 2025 00:09

படித்து வேலையில்லா பட்டதாரியாக இருப்பவர்களுக்கு ரூ 5,000/- கொடுத்து அவர்களை மூளை சலவை செய்து சோம்பேறியாக்கும் திட்டம். வெளைங்கிடும் தமிழ்நாடு. சிந்திக்கும் திறன் இல்லாத அரசியல்வாதிகள் தான்.


C.SRIRAM
மார் 10, 2025 23:29

ஏதோ இவங்கப்பா சொத்தை எடுத்து கொடுக்கிறமாதிரி உளறுகிறார் . வரிப்பணத்தை ஆட்டயப்போடுவதில் மற்றும் மக்களை முட்டாளாகவே வைத்திருப்பதில் படித்தவனுக்கும் தற்குறிக்கும் வித்தியாசமில்லை


Ramesh Sargam
மார் 10, 2025 20:07

படித்துவிட்டு 5 ஆண்டுக்கும் மேலாக வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை கொடுப்பதை தவிர்த்து, அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவேண்டும், வேலை கொடுக்கவேண்டும், அல்லது அவர்கள் தொழில் துவங்க பணஉதவி செய்யவேண்டும் என்று கோரிக்கைவிடுத்த்தால் அது சிறப்பு. அதைவிட்டு ரூ. 5,000 உதவித்தொகை கொடுத்தால் அவர்கள் அதைவைத்துக்கொண்டு ஜாலியாக சுற்றித்திரிவார்கள். அந்த உதவித்தொகையை வைத்து ஏதாவது ஒரு பெட்டிக்கடை வைத்து பிழைக்கலாம் என்று தோன்றாது. உதவித்தொகை என்பது இளைஞர்களை சோம்பேறிகளாக மாற்றும்.