வாசகர்கள் கருத்துகள் ( 5 )
உண்டியல் படமாகவும் இருக்க வாய்ப்புண்டு. தொகை பெரியது - இனி இந்த செய்தி வராது.
பகுதி செயலர், பகுதி அல்லது ஒன்றிய "உதவி" பொருளாளர் அல்லது கடைக்கோடி தம்மாத்தூண்டு நிர்வாகி" இவர்களின் பீடா செலவுக்கு உள்ள பணமாக்க கூட இருக்கும் அப்படீங்கறாங்க .
தொகையை பார்த்தால் திமுகவின் பகுதி உதவி செயலாளர் அளவில் சுருட்டப்படும் பணமாக தெரிகிறது. ஆகையால் இனி இது சம்பந்தமாக செய்திகள் கூட வராது.
வினோத் குமார் எடுத்து வந்தது ஹவாலா பணமா அல்லது அரசியல்வாதிகள் அல்லது தொழிலதிபர்களின் பணமா ?? என விசாரணை நடக்கிறது. இதை கண்டுபிடித்து சொல்ல ஒருமணி நேரம் போதாதா..?
ஹவாலா பணம் என்பது ஒரு வகையான கணக்கில் வராத கருப்பு பணம். இது பல வகைகளில் உருவாகிறது. வீடு, நிலம் போன்றவற்றை வாங்கும்போது, விற்கும்போது வரி, பத்திரபதிவு கட்டணம் ஆகியவற்றை குறைப்பதற்காக பாதி பணத்தை வங்கிகள் மூலமாகவும் மீதியை ரொக்க பணமாகவும் கொடுக்கல் வாங்கல் நடக்கிறது. இதில் ரொக்கமாக பெறப்படும் தொகைக்கு கணக்கு காட்டப்படுவதில்லை. அதேபோல திரைப்படங்களை தயாரிப்பவர்கள் நடிகர்களுக்கும் மற்றவர்களுக்கும் எவ்வளவு பணம் தருகிறார்கள் என்பதை வெளிப்படையாக சொல்வதில்லை, ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்திலும், போதைப்பொருள் கடத்தலிலும், தடை செய்யப்பட்ட, பொருட்கள் மற்றும் ஆயுத கடத்தலிலும் கூட இவ்வாறு ஹவாலா பண பரிமாற்றம் நடைபெறுகிறது.