உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தெற்கு ரயில்வே திட்டங்களுக்கு ரூ.9,286 கோடி: 5 புதிய திட்டங்களுக்கு தலா ரூ.1,000 மட்டுமே!

தெற்கு ரயில்வே திட்டங்களுக்கு ரூ.9,286 கோடி: 5 புதிய திட்டங்களுக்கு தலா ரூ.1,000 மட்டுமே!

சென்னை: மத்திய பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கியுள்ள, 9,286 கோடி ரூபாய் எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி என்பது குறித்த பட்டியல், நேற்று வெளியாகி உள்ளது. புதிய இரட்டை பாதை திட்டங்களுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது.மத்திய இடைக்கால பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு, 9,048 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், தற்போதைய மத்திய பட்ஜெட்டில், சற்று கூடுதலாக தெற்கு ரயில்வேக்கு, 9,286 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி என்பது குறித்த பட்டியலை, 'பிங்க் புக்' வாயிலாக, ரயில்வே வாரியம் நேற்று வெளியிட்டுள்ளது. குறிப்பாக, புதிய பாதை திட்டங்களுக்கு, 301 கோடி; அகலப்பாதை திட்டங்களுக்கு, 478 கோடி; இரட்டை பாதை திட்டங்களுக்கு, 1,928 கோடி; ரயில் தண்டவாளங்கள் புதுப்பிப்புக்கு, 1,755 கோடி; மின்மயமாக்கல் பணிக்கு, 156 கோடி; சுரங்கம் மற்றும் மேம்பால பணிக்கு, 534 கோடி; சிக்கனல் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு, 511 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.ஆனால், இதற்கு முந்தை இடைக்கால மத்திய பட்ஜெட்டில், புதிய பாதை திட்டங்களுக்கு, 976 கோடி ரூபாயும், இரட்டை பாதை திட்டங்களுக்கு, 2,214 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது. தற்போது, இந்த நிதி வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. அதனால், புதிய மற்றும் இரட்டை பாதை திட்டங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.ஸ்ரீபெரும்புதுார் - இருங்காட்டுக்கோட்டை - கூடுவாஞ்சேரி; திண்டிவனம் - திருவண்ணாமலை; அத்திப்பட்டு - புத்துார்; ஈரோடு - பழனி; சென்னை - கடலுார் - புதுச்சேரி போன்ற புதிய ரயில்பாதை திட்டங்களுக்கு தலா 1,000 ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், மேற்கண்ட புதிய ரயில் பாதை திட்டங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகம், கேரளா, மற்றும் ஆந்திரா, கர்நாடகாவில் ஒரு பகுதியை கொண்டுள்ள தெற்கு ரயில்வேக்கு, இடைக்கால பட்ஜெட்டில், 9,048 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தற்போது, 9,286 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக நிதி ஒதுக்கியதால் பணிகள் தாமதமின்றி நடக்கும்.புதிய மற்றும் இரட்டை பாதை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறைவாக இருந்தாலும், அகலப்பாதை மற்றும் மின்மயமாக்கல் திட்டப்பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.புதிய பாதை முடங்கும்“தெற்கு ரயில்வேயில், 10 ஆண்டுகளில் புதிய பாதை திட்டங்கள் எதுவும் முடிக்கப்படவில்லை; முடிக்கும் தருவாயிலும் இல்லை. அதற்கு, போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததே காரணம். இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியையும், மத்திய பட்ஜெட்டில் குறைத்து ஒதுக்கி இருப்பதால், புதிய பாதை திட்டங்கள் முடங்கும்.- மனோகரன், முன்னாள் தலைவர்,டி.ஆர்.இ.யூ., ரயில்வே தொழிற்சங்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Saai Sundharamurthy AVK
ஆக 16, 2024 21:33

ரயில்வே திட்டங்கள் என்பது பல கட்ட பணிகளை உள்ளடக்கியது. போன வருடம் 6368 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்குண்டான முதற் கட்டம், இரண்டாம் கட்டம் என்று பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாநில அரசின் சார்பாக நிலம் கையகப்படுத்தல் பணிகள் கால தாமதவதால் அடுத்த கட்டப் பணிகள் மேற்கொள்ள முடியாது. அதற்குண்டான நிதியையும் ஒதுக்க முடியாத சூழ்நிலை உள்ளது. முதலில் ஒதுக்கப்பட்ட நிதிக்கு உண்டான வேலைகள் முடிய வேண்டும்.


தமிழ்வேள்
ஆக 16, 2024 21:15

தமிழகத்தில் பிரைவேட் பஸ் ஓனர் ஆம்னி பஸ் ஓனர் கும்பல் அனைவரும் திருட்டு திராவிட கும்பல் ஆசாமிகள் மட்டுமே....திமுக அதிமுக காங்கிரஸ் என்று எல்லா பயலும் உள்ளடக்கம்...நிலம் கையகப்படுத்த திராவிட அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவதில்லை.... முடிந்த அளவு முட்டு கட்டை போட்டால் ரயில்வே என்ன செய்யும்? நிலம் இன்றி ரயில் பாதை ஆகாயத்திலா போட இயலும்? திராவிடம் அண்டர் கிரவுண்ட் வேலை செய்து ரயில் திட்டத்தை இழுத்து அடிக்கிறது... திராவிட கும்பலை தேர்ந்தெடுத்த தமிழனுக்கு விடிவுகாலம் பிறக்காது..... சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்ளும் அறிஞர் இனம் தமிழினம்....


அப்பாவி
ஆக 16, 2024 17:49

அந்த ஆயிரம் ரூவாயை நான் தர்ரேன். கேன்சல் பண்ணித் தொலைங்க.


Ms Mahadevan Mahadevan
ஆக 16, 2024 16:52

தமிழ் நாட்டுக்கு பிஜேபி நல்லதை செய்யாது


Ms Mahadevan Mahadevan
ஆக 16, 2024 16:50

தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காத பிஜேபி. யை மக்கள் ஒதுக்குவார்கள்


Ms Mahadevan Mahadevan
ஆக 16, 2024 16:49

தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல


Azar Mufeen
ஆக 16, 2024 16:46

நியாயம், நேர்மை என்று டிக்கெட் எடுத்தால் இப்படித்தான் நிதி கிடைக்கும்


panneer selvam
ஆக 16, 2024 15:39

The railway projects which are on hold shall be always allocated a nominal token amount to keep those projects in record . It is the practice of railways for the last 150 years. It is not new .For new projects , What Tamilnadu MPs have done so far except to misguide the people . Now railway priority is doubling , electrification and enhanced railway station facilities not new projects . So Tamilnadu is getting due share of Rs 9,000 crores on these three objectives . No need for the people to get excitement .


aaruthirumalai
ஆக 16, 2024 13:14

பாஜக விற்கு சனி பகவானின் ஆசி கிடைக்க ஆரம்பித்து விட்டது.


venugopal s
ஆக 16, 2024 11:44

தமிழகத்துக்கு இவ்வளவு பெரிய அநியாயம் செய்யும் மத்திய பாஜக அரசுக்கு கண்ணை மூடிக்கொண்டு முட்டுக் கொடுப்பதால் தான் பாஜகவினரை குருட்டு பக்தர்கள் என்று அன்புடன் அழைக்கிறோம்!


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ