உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.97 லட்சம் மோசடி தொழில் அதிபருக்கு ‘காப்பு’

ரூ.97 லட்சம் மோசடி தொழில் அதிபருக்கு ‘காப்பு’

ஓசூர்: ஓசூரில், சாப்ட்வேர் இன்ஜினியர் கார்த்திக், 46, என்பவரிடம், 97 லட்சம் ரூபாய் மோசடி செய்த, ரியல் எஸ்டேட் அதிபர் ரமேஷ், 46, கைது செய்யப்பட்டார். கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் வசிப்பவர் கார்த்திக்; சாப்ட்வேர் இன்ஜினியர். இவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். ஓசூர் திருமலை நகரை சேர்ந்தவர் ரமேஷ், 46. ரியல் எஸ்டேட் அதிபர். கடந்த, 2005 முதல், கார்த்திக்கும், ரமேஷும் நண்பர்களாக பழகினர். ‘ரியல் எஸ்டேட் தொழில் செய்தால், நல்ல லாபம் கிடைக்கும்’ என, கார்த்திக்கிடம், ரமேஷ் ஆசை காட்டியுள்ளார். நம்பிய கார்த்திக், 2010 ஏப்., 5 முதல், 2020 வரை, 97 லட்சத்து 43 ஆயிரம் ரூபாயை ரமேஷிடம் கொடுத்து ஏமாந்தார். புகாரில், ஓசூர் போலீசார், ரமேஷை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி