உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவர்னரின் எண்ணம் ஈடேறாது ஆர்.எஸ்.பாரதி உறுதி

கவர்னரின் எண்ணம் ஈடேறாது ஆர்.எஸ்.பாரதி உறுதி

சென்னை:'காவியை பரப்பும், கவர்னரின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது' என, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.அவரது பேட்டி:'அடுத்த ஆண்டு தி.மு.க.,வை வேரோடு அழிக்கும் ஆண்டாக இருக்கும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறியிருக்கிறார். அவர் இந்த ஆண்டே அ.தி.மு.க.,வை அழித்து விட்டார். திருவள்ளுவர் தினத்தில், காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்திற்கு, கவர்னர் ரவி மரியாதை செலுத்தி இருக்கிறார். காவியை பரப்பும் அவரது எண்ணம், ஒருபோதும் ஈடேறாது. கவர்னர் ரவியின் பதவிக்காலம் முடிந்து விட்டது. அதனால், தன் பதவியை காப்பாற்றிக் கொள்ள, ஏதேதோ செய்து வருகிறார்.தி.மு.க., சட்டத்துறை மாநாடு, நாளை சென்னையில் நடக்கிறது. அரசியல் சட்டத்திற்கு எதிராக, கவர்னர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு, சட்டப்பூர்வமாக தீர்வு காண்பது குறித்து, தி.மு.க., சட்டத்துறை மாநாட்டில் முடிவு எடுக்கப்படும். நீட் தேர்வை, மாநில அரசு ரத்து செய்ய முடியாது என்பது மக்களுக்கு தெரியும். மாநிலங்களுக்கு நிதி கொடுக்காமல், மத்திய பா.ஜ., அரசு வஞ்சிப்பதும் தெரியும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை